டோக்கியோ ஒலிம்பிக் ஜூலை 23ஆம் தேதித் தொடங்கி, ஆகஸ்ட் 8ஆம் தேதி அன்று நிறைவடைந்தது. இந்தக் காலகட்டத்தில் பல்வேறு சமூக வலைதளங்களில் ஒலிம்பிக் தொடர்பான பதிவுகள் அதிகம் உலாவிவந்தன.
ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரையிலான ஒலிம்பிக் தொடர்பான செயல்பாடுகள் குறித்த ட்ரெண்ட் விவரங்களை ஃபேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அதிகளவிலான ட்ரெண்டிங் செயல்பாடுகள் கொண்ட நாடாக இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் அமெரிக்காவும், பிரேசில் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
விளையாட்டு வீரர்களைப் பொறுத்தவரை அதிகளவில் குறிப்பிடப்பட்ட வீரர் என்ற பெருமையை அமெரிக்க வீரர் சைமோனி பைல்ஸ் பெற்றுள்ளார். இரண்டாம் இடத்தை இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பிடித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்குப்பின் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு பாலோயர்கள் அதிகளவில் அதிகரித்துள்ளனர். இன்ஸ்ட்ராகிராமில் நீரஜ் சோப்ராவுக்குப் புதிதாக 28 பாலோயர்களும், பி.வி. சிந்துவுக்கு ஏழு லட்சம் பாலோயர்களும், மேரி கோமுக்கு 2.7 லட்சம் பாலோயர்களும் அதிகரித்துள்ளனர்.
மேலும், ஃபேஸ்புக் நிறுவனம் யுனிசெஃப் இந்தியா அமைப்புடன் இணைந்து குழந்தைகள் பாதுகாப்புத் தொடர்பாக சிறப்புத் திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: சமையல் எரிவாயு காலியா... ஒரு மிஸ்ட் கால் போதும்