ETV Bharat / bharat

ஜி20 பொறுப்பை தொடர்ந்து இந்தியாவுக்கு மேலும் ஒரு மகுடம் - ஏபிபியூ தலைமைப் பொறுப்பு

தாய்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட ஆசியான் பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொள்ள உள்ளது.

ஜி20 பொறுப்பை தொடர்ந்து இந்தியாவுக்கு மேலும் ஒரு மகுடம்

author img

By

Published : Jan 4, 2023, 7:59 AM IST

டெல்லி: தாய்லாந்தின் பாங்காக்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றியத்தின் (APPU) தலைமைப் பொறுப்பை இந்தியா இம்மாதத்தில் ஏற்றுக்கொள்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பாங்காங்கில் நடைபெற்ற 13ஆவது ஆசியான்-பசிபிக் அஞ்சல் ஒன்றிய மாநாட்டில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அஞ்சலக சேவைகள் வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் வினயா பிரகாஷ் சிங் ஒன்றியத்தின் தலைமை செயலாளராக 4 ஆண்டுகளுக்கு பொறுப்பு வகிக்க உள்ளார்.

இதுகுறித்து பிரகாஷ் சிங் கூறுகையில், அஞ்சல் ஒன்றியத்தின் மூலம் வணிக வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும், ஒன்றியத்தின் நீடித்த நிலைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், மறுசீரமைப்பதற்கும் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள அஞ்சல் துறைகளுடன் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே எனது குறிக்கோள் என்றார்.

ஆசியான்-பசிபிக் பிராந்தியத்தை சேர்ந்த 32 நாடுகள் பங்கேற்றுள்ள அமைப்பாக திகழும் ஆசியான் பசிபிக் அஞ்சல் ஒன்றியம், இந்தப் பிராந்தியத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட அமைப்பாகும். உறுப்பு நாடுகளுக்கு இடையே அஞ்சலகம் தொடர்பான உறவுகளை மேம்படுத்துவதும் அஞ்சல் சேவைகளில் ஒத்துழைப்பை வழங்குவதும் இதன் நோக்கமாகும். இந்தியா ஜி20 நாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளதை தொடர்ந்து இந்த பொறுப்பையும் ஏற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இங்கிலாந்து அரசர் சார்லஸூடன் ஜி20 குறித்து உரையாடிய பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.