கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெலகாவியில் ஐந்து தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிகள் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தொடங்கிவைத்தார். அப்போது அவர் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுவரும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்கள் குறித்து பேசினார்.
அவர் பேசுகையில், நாட்டின் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் சாலை போக்குவரத்து மேம்பாட்டையே சார்ந்து உள்ளது. எனவே, சாலைப் போக்குவரத்தைப் பலப்படுத்த அரசு தீவிர முனைப்பு காட்டிவருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் நாட்டின் சாலைப் போக்குவரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் மாடல்களை ஒட்டி தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் அமைக்கப்படும்.
மூன்று லட்சம் கோடி மதிப்பீட்டில் 9 ஆயிரம் கிமீ தொலைவிற்கான பசுமை வழி தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. எனவே, இந்தத் திட்டப்பணிகள் மூலம் தொழில்சாலைகள் பெருகி நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் பெரும் வளர்ச்சிபெறும்" என்றார்.
இதையும் படிங்க: 'ஜூனில் கரோனா நான்காம் அலை, ஆகஸ்டில் உச்சம்'