புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் கடற்கரைப் பகுதியில் எம்ஆர்எஸ்ஏஎம் (MRSAM) எனும் புதிய நவீன ரக ஏவுகணை சோதனையோட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
இஸ்ரேல் விண்வெளி நிறுவனம் மற்றும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இணைந்து மேம்படுத்தியுள்ள இந்த ஏவுகணை, வானில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
இன்று மதியம் 3.55 மணி அளிவில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின்போது, பன்ஷி எனும் வான்வெளி இயந்திரத்தை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்தது. பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் தயாரித்துள்ள இந்த ஏவுகணை விரைவில் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளது.
இதன் மூலம் ராணுவத்தின் போர் செயல் திறன் மேலும் வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஐஐடி வாரணாசியில் இஸ்ரோவின் கல்வி மையம்