டெல்லி: பயங்கரவாதம், ஆயுதக்கடத்தல், போதைப்பொருள், பணமோசடிக்கு எதிராக இந்தியா நிற்கிறது என பிரதமர் நரேந்திர மோடி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation) கூட்டத்தில் பேசியுள்ளார்.
வீடியோ கான்பரன்ஸிங்க் மூலம் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலுள்ள அனைத்து நாட்டுப்பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதில், பிரதமர் பேசும்போது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றி இந்தியா பணியாற்றுவதில் உறுதியாக உள்ளது என்றார்.
இந்த பெருந்தொற்றுக் காலத்தில் 150 நாடுகளுக்கு இந்தியா மருத்து உபகரணங்கள் வழங்கி உதவி புரிந்துள்ளதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, இந்தப் பெருந்தொற்றை முழு உலகமும் எதிர்கொள்ள இந்தியா தனது கரோனா தடுப்பு மருந்து உற்பத்தி, விநியோகத் திறன் மூலம் உதவும் என்றார்.
பல வெற்றிகளைப் பெற்றுள்ள ஐக்கிய நாடுகள் சபை தனது 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளசூழலில் கூட, அதன் அடிப்படை குறிக்கோள்களில் சில முழுமையடையவில்லை எனச் சுட்டிக்காட்டிய மோடி, பொருந்தொற்றினால் துயரத்திலிருக்கும் உலகம் ஐக்கிய நாடுகள் சபையில் புரட்சிகர மாற்றங்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: உள்ளூர் பொருள்களுக்கு குரல் கொடுப்போம்- பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து