இந்தியாவில் கடந்த சில நாள்களாகக் குறைந்திருந்த கரோனா பாதிப்பு, தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 89 ஆயிரத்து 129 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2020 செப்டம்பருக்குப் பிறகு அதிகபட்ச ஒரு நாள் கரோனா பாதிப்பு ஆகும். கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 23 லட்சத்து 92 ஆயிரத்து 260ஆக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, மகாராஷ்டிரா, பஞ்சாப், கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், சண்டிகர், குஜராத், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
அதேபோல, நேற்று (ஏப்ரல் 2) 714 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 110ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சத்து 69 ஆயிரத்து 241ஆக உள்ளது.
இதுவரை மொத்தமாக 24 கோடியே 69 லட்சம் நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று மட்டும் சுமார் 10 லட்சத்து 46 ஆயிரம் பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 7 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி: மத்திய சுகாதார அமைச்சகம்