இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு குறைந்துவந்த நிலையில் மீண்டும், தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்துவருகிறது. அதன்படி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா 50 ஆயிரத்து 848 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை மூன்று கோடியே 28 அயிரத்து 709 ஆக அதிகரித்துள்ளது.
68,000 பேர் டிஸ்சார்ஜ்
அதேபோல் நேற்று (ஜூன் 22) ஒரேநாளில் 68 ஆயிரத்து 817 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாகக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடியே 89 லட்சத்து 94 ஆயிரத்து 855 ஆக உள்ளது.
1,358 பேர் உயிரிழப்பு
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,358 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்து 90 ஆயிரத்து 660 ஆக உயர்ந்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மேலும் இதுவரை 29 கோடியே 46 லட்சத்து 39 ஆயிரத்து 511 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தீவிரமடையும் டெல்டா பிளஸ்... மக்களே உஷார்: 3 ஆம் அலை ஆரம்பமா?