ETV Bharat / bharat

நாட்டில் ஒரே நாளில் 2.61 லட்சம் கரோனா பாதிப்பு

இதுவரை இல்லாத வகையில் நாட்டில் ஒரே நாளில் இரண்டு லட்சத்து 61 ஆயிரத்து 500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

coorna
கரோனா
author img

By

Published : Apr 18, 2021, 11:02 AM IST

இந்தியாவில் கடந்த சில நாள்களாகக் கரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 61 ஆயிரத்து 500 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்து 88 ஆயிரத்து 109ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநிலங்களில் அதிகளவிலான கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. அதேபோல, நேற்று (ஏப்ரல் 17) 1,501 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 77 ஆயிரத்து 150 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு கோடியே 28 லட்சத்து ஒன்பதாயிரத்து 643ஆக உள்ளது.

தற்போது, 18 லட்சத்து ஆயிரத்து 316 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். இதுவரை மொத்தமாக 12 கோடியே 26 லட்சத்து 22 ஆயிரத்து 590 தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: கோவிட்டுக்கு எதிராகக் கடும் யுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.