ETV Bharat / bharat

கரோனா நிலவரம்: நாட்டில் ஒரே நாளில் 354 உயிரிழப்புகள்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 480 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 354 நபர்கள் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

கரோனா
கரோனா
author img

By

Published : Mar 31, 2021, 12:07 PM IST

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலவரத்தை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 53 ஆயிரத்து 480 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 354 நபர்கள் கரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை ஒரு கோடியே 21 லட்சத்து 49 ஆயிரத்து 335 பேர் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஐந்து லட்சத்து 52 ஆயிரத்து 566 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இன்று காலை 8 மணியளவில் கணக்கிடப்பட்டதன்படி, மீட்பு விகிதம் மேலும் குறைந்து 94.11 விழுக்காடாக தற்போது உள்ளது.

கரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 14 லட்சத்து 34 ஆயிரத்து 301ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் இறப்பு விகிதம் 1.34 விழுக்காடாக உள்ளது.

இந்தியாவின் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி 20 லட்சத்தையும், ஆகஸ்ட் 23ஆம் தேதி 30 லட்சத்தையும், செப்டம்பர் 5ஆம் தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16ஆம் தேதி 50 லட்சத்தையும் தாண்டியது. தொடர்ந்து செப்டம்பர் 28ஆம் தேதி 60 லட்சம், அக்டோபர் 11ஆம் தேதி 70 லட்சம், அக்டோபர் 29ஆம் தேதி 80 லட்சம், நவம்பர் 20ஆம் தேதி 90 லட்சம் எனக் கடந்து டிசம்பர் 19ஆம் தேதி ஒரு கோடியைத் தாண்டியது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அளித்துள்ள புள்ளிவிவரங்களின்படி, மார்ச் 30ஆம் தேதி வரை 24 கோடியே 36 லட்சத்து 72 ஆயிரத்து 940 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நேற்று (மார்ச்.30) மட்டும் 10 லட்சத்து 22 ஆயிரத்து 915 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: மம்தா Vs அதிகாரி: நாளை நந்திகிராமில் வாக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.