டெல்லி: ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் கரோனா பாதிப்பு குறித்து தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், "கடந்த 24 மணிநேரத்தில் 43,071 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக இதுவரையில் 3கோடியே 5லட்சத்து 45ஆயிரத்து, 433 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணிநேரத்தில் 955 பேர் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டு இறந்த நிலையில், அதன் மொத்த எண்ணிக்கை 4லட்சத்து 2ஆயிரத்து 5ஆக உயர்ந்துள்ளது. தற்போது கரோனா தொற்று பாதிப்படைந்தவர்களில் 4லட்சத்து 85ஆயிரத்து 350 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதிதாக 52ஆயிரத்து, 299 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். அந்தவகையில் மொத்தமாக 2கோடியே 96லட்சத்து 58ஆயிரத்து 78 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
கரோனா காலத்தில் தனியார் பள்ளிகளின் வசூல் தந்திரங்கள்... நடவடிக்கை எடுக்குமா பள்ளிக்கல்வித் துறை?
நாட்டில் மொத்தம் 35கோடியே, 12லட்சத்து, 21ஆயிரத்து, 306 பயனர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 63 லட்சத்து, 87ஆயிரத்து, 849 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.