ETV Bharat / bharat

நோ கமெண்ட்ஸ்.! சிம்ப்ளி வேஸ்ட்..! - காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் கேள்விக்கு இந்திய பிரதிநிதி பதில்! - ஐநா பாதுகாப்பு கவுன்சில்

காஷ்மீர் குறித்து பாகிஸ்தானின் எரிச்சலூட்டும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்திய பிரதிநிதி தெரிவித்தார்.

Ruchira Kamboj
Ruchira Kamboj
author img

By

Published : Apr 25, 2023, 10:01 AM IST

ஐ.நா. : காஷ்மீர் எல்லைப் பிரச்சினை குறித்து பாகிஸ்தான் எழுப்பும் எரிச்சலூட்டும் வகையிலான கேள்விகளுக்கு பதிலளித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ் தெரிவித்தார்.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஏப்ரல் மாதத்திற்கான தலைமை பொறுப்பை ரஷ்யா ஏற்று நடத்தி வருகிறது. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிப்பதில் பலதரப்பட்ட உறுப்பினர்களின் பங்கு மற்றும் பலன் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் பேசிய ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான பாகிஸ்தானின் நிரந்திர பிரதிநிதி முனிர் கான், ஜம்மு காஷ்மீர் பிரச்சினை குறித்து தன் அறிக்கையில் குறிப்பிட்டார். இதற்கு பதிலளித்து பேசிய ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கான இந்தியாவின் நிரந்திர உறுப்பினர் ருச்சிரா கம்போஜ், "மறுகாலனியாக்கத்தின் அடிப்படை உண்மைகள் குறித்த புரிதல் மற்றும் முற்றிலும் அறிந்திராத வகையில் ஒரு நாட்டின் நிரந்திர பிரதிநிதியின் எரிச்சலூட்டும் கருத்துகளை ஐநா பாதுகாப்பு கவுன்சில் கேட்டுக் கொண்டு இருப்பதாக கூறினார்.

மேலும் பாகிஸ்தான் பிரதிநிதியின் எரிச்சலூட்டும் கருத்துகளுக்கு பதிலளித்து பாதுகாப்பு கவுன்சிலின் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றார். மேலும் கடந்த கால கூட்டங்களில் காஷ்மீர் குறித்த கேள்விகளுக்கு இந்தியா கொடுத்த பதில்களை பாகிஸ்தான் குழுவு பார்க்குமாறு"அவர் தெரிவித்தார்.

காஷ்மீர் பிரச்சினை குறித்து ஐநாவின் பல்வேறு கூட்டங்களில் பாகிஸ்தான் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. அந்த கூட்டங்களின் நிகழ்ச்சி நிரல் மற்றும் விவாதத்தின் தலைப்பை கூட பொருட்படுத்தாமல் பாகிஸ்தான் தொடர்ந்து காஷ்மீர் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்புகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கி வந்த 370 சிறப்பு அந்தஸ்து சட்டப் பிரிவை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

இதன் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்சினை அதிகரிக்கத் தொடங்கியது. காஷ்மீரை சொந்தம் கொண்டாடி வரும் பாகிஸ்தான் அது தொடர்பாக பல்வேறு கூட்டங்களில் பேசி தனக்கு ஆதரவு திரட்ட முயற்சித்து வருகிறது. இருப்பினும் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்து நீக்கம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் எனக் கூறி மத்திய அரசு அதை நிராகரித்து வருகிறது.

அதேநேரம், யதார்த்தத்தை புரிந்து கொண்டு, இந்தியாவுக்கு எதிரான அனைத்து பிரசாரங்களையும் நிறுத்த வேண்டும் என்றும் பயங்கரவாதம், விரோத போக்கு மற்றும் வன்முறை இல்லாத சூழலில் பாகிஸ்தானுடன் இயல்பான அண்டை நாடுகளின் உறவை பேண விரும்புவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : பாகிஸ்தான் - சீனா பொருளாதார உறவில் விரிசல் - நெருக்கடியை தவிர்க்க இந்தியாவை தேடுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.