ETV Bharat / bharat

’இந்தியா புத்த மத நம்பிக்கையின் மையப்புள்ளி’ - பிரதமர் மோடி பேச்சு

குஷி நகர் விமான நிலையத்தை புத்தருக்கு அர்ப்பணிப்பதாகவும், புத்த மத நம்பிக்கையின் மையப்புள்ளியான இந்தியாவில், புத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை இந்த விமான நிலையம் அதிகரிக்க உதவும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஷிநகர்
குஷிநகர்
author img

By

Published : Oct 20, 2021, 3:17 PM IST

புத்த ஸ்தலங்களை இணைக்கும் முக்கிய ஊரான கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகரில், புதிதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (அக்.20) திறந்து வைத்தார்.

தொடக்க விழாவில் உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

புத்தருக்கு அர்ப்பணிப்பு

புத்தர் பிறப்பு - இறப்பு எனும் சுழற்சியில் இருந்து விடுபட்டு மகாபரிநிர்வாணா அடைந்த இடமான குஷிநகர், லும்பினி, சாரநாத், கயா ஆகிய புத்த தலங்களின் மையப் புள்ளியாக விளங்குகிறது.

குஷிநகர்
குஷிநகர்

இந்நிலையில், விமான நிலையத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, குஷி நகர் விமான நிலையத்தை புத்தருக்கு அர்ப்பணிப்பதாகவும், புத்த மத நம்பிக்கையின் மையப்புள்ளியான இந்தியாவில், புத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையை இந்த விமான நிலையம் அதிகரிக்க உதவும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இருந்து வந்த முதல் விமானம்

இலங்கையிலிருந்து 100 புத்த பிக்குகள், முக்கியஸ்தர்களை, புத்த மத நினைவுச்சின்னங்களைத் தாங்கிய விமானம், கொழும்பு விமான நிலையத்திலிருந்து முதல் விமானமாக வந்தடைந்தது.

புத்த மதத்தில் உள்ள அஸ்கிரிய, அமராபுரா, ராமான்யா, மல்வத்தா எனும் நான்கு கட்டளைகளின் துணைத் தலைவர்கள், நமல் ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசின் ஐந்து அமைச்சர்களும் இந்த விமானத்தில் குஷி நகர் வந்தடைந்தனர்.

குஷிநகர் சர்வதேச விமான நிலையம்

குஷிநகர் விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தால் 260 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் புதிய சர்வதேச முனையக் கட்டடம் 3,600 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.

குஷிநகர்
குஷிநகர்

உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய இரு மாநிலங்களுக்கும் இந்த விமான நிலையம் சேவையாற்றும் வகையில் செயல்படும்.

உலகம் முழுவதிலும் புத்தரின் மகாபரிநிர்வாணா தலத்தை பார்வையிட வருகை தரும் சர்வதேச பயணிகளுக்கு தடையற்ற இணைப்பை இந்த சர்வதேச விமான நிலையம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு அதிகரிக்கும்

ஜப்பான், தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா, தைவான் போன்ற கணிசமான புத்த மதத்தைப் பின்பற்றும் மக்கள் வாழும் நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளையும் யாத்ரீகர்களையும் ஈரக்கும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குஷிநகரில் தொடங்கப்படும் சர்வதேச விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை 20 விழுக்காடு அதிகரிக்கும் என்றும், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் உத்தரப் பிரதேச அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து உழைப்போம் - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.