ETV Bharat / bharat

தற்சார்பு இந்தியா கனவு நனவாக வேண்டும் - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா - தற்சார்பு இந்தியா திட்டம் ஓம் பிர்லா

எதிர்காலச் சவால்களை எதிர்கொண்டு தற்சார்பு இந்தியா கனவு நனவாக இளைஞர்கள் பாடுபட வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.

Om Birla
Om Birla
author img

By

Published : Feb 15, 2021, 10:37 AM IST

பாஜகவின் முக்கிய முன்னோடியான தீன்தயாளின் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இந்தியாவின் எதிர்காலச் சவால்கள் குறித்துப் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலக நாடுகளின் பொருளாதாரம் பெரும் முடக்கம் கண்டன. பல்வேறு முன்னேறிய நாடுகள் சுகாதார கட்டமைப்பு ஆட்டம் கண்டன. இந்தச் சூழலில் இந்தியா கோவிட்-19 பாதிப்பை திறம்படக் கையாண்டு மீண்டுவந்துள்ளது.

கோவிட்-19 பாதிப்பு ஆரம்ப காலத்தில் இந்தியாவின் உற்பத்தித் துறை சவாலை எதிர்கொள்ள தயராக இல்லை. அதேவேளை குறுகிய காலத்தில் தேவைக்கேற்ப இந்தியா தன்னை தயார்செய்துள்ளது.

இந்த உறுதித்தன்மையைத் தொடர்ந்து கைக்கொண்டு வரப்போகும் ஆண்டுகளிலும் தனது முழு ஆற்றலை இந்தியாவின் இளைஞர்கள் வெளிப்படுத்த வேண்டும். நாட்டின் தன்னிறைவை உறுதிசெய்யும் விதமாக தற்சார்பு இந்தியா என்ற கனவை இளைஞர்கள் நனவாக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: நாட்டில் மூன்றில் ஒருவரிடம் போலி லைசென்ஸ்: ஆதங்கத்தில் போட்டுடைத்த கட்கரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.