திருச்சூர்: கேரள மாநிலத்தை சேர்ந்த இந்தியாவின் முதல் கரோனா நோயாளிக்கு (பெண்) மீண்டும் கரோனா பாதிப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் ஜெ. ரீனா, அந்தப் பெண்ணுக்கு மீண்டும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது ஆர்டிபிசிஆர் சோதனை பாசிட்டிவ்; ஆன்டிஜென் நெகட்டிவாக உள்ளது. அறிகுறியற்ற கரோனா பாதிப்பு இது என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், படிப்பு தொடர்பாக அப்பெண் டெல்லி செல்லவிருந்ததால் அவரது மாதிரிகளை எடுத்து சோதனை செய்தோம். அதில் ஆர்டிபிசிஆர் சோதனை பாசிட்டிவ். அவர் தற்போது வீட்டில் இருக்கிறார்; உடல்நலனில் எந்த பிரச்னையும் இல்லை என்றார்.
2020 ஜனவரி 30ஆம் தேதி இப்பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர் வூகான் பல்கலைக்கழகத்தில் இருந்த செமஸ்டர் விடுமுறைக்காக கேரளா திரும்பிய மூன்றாம் ஆண்டு மருத்து மாணவி ஆவார். திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 3 வார சிகிச்சை பெற்ற பின் அவருக்கு கரோனா நெகட்டிவ் ஆனது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நீட் தேர்வு விண்ணப்ப நடைமுறை: தொடங்கியதும் முடங்கியது!