கம்போடியாவில் கடந்த அக்டோபர் மாதம் பெய்த தொடர் கனமழையின் காரணமாக 19 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில் அங்குள்ள பல பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து கம்போடியா மக்களுக்கு இந்தியா சார்பில் மூன்றாயிரம் வெள்ள நிவாரண கிட் உள்பட 15டன் வெள்ள நிவாரண பொருள்களை இந்திய கடற்படையின் கில்டன் கப்பலில் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் இந்திய கடற்படைக் கப்பல் கில்டன் செவ்வாய்க்கிழமை (டிச. 29) கம்போடியாவின் சிஹானுக்வில் துறைமுகத்தை அடைந்தது. இதனையடுத்து நேற்று (டிச. 30 ) வெள்ள நிவாரண பொருள்களை கம்போடியாவிடம் இந்தியா ஒப்படைத்தது.
இது குறித்து இந்திய டிப்லமட் பி சுப்பா ராவ் கூறுகையில், “அண்டை நாடான கம்போடியாவிற்கு வெள்ள பாதிப்பின்போது இந்தியா உதவிசெய்வது இரு நாட்டு உறவை வலுப்படுத்தும்” என்றார்.
இதையும் படிங்க...சிபிஎஸ்இ தேர்வு அட்டவணை இன்று வெளியீடு!