ETV Bharat / bharat

Ind Vs SL Asia Cup 2023 : இந்திய சுழலில் சுருண்ட இலங்கை! இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்தியா! - India versus Srilanka asia cup 2023 super 4

Ind Vs SL Asia Cup 2023 Super 4 : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணியை வீழ்த்தி முதல் அணியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

Cricket
Cricket
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 6:56 AM IST

கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானின் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தா, வங்காளதேசம் ஆகிய அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.

சூப்பர் 4 சுற்றில் நேற்று(செப். 12) நடந்த 4வது ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் இன்னிங்சை ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் தொடங்கினர். அவசரகதியான ஷாட்டுகளை அடித்து சுப்மான் கில் (13 ரன்) மற்றும் விராட் கோலி (3 ரன்) அடுத்தடுத்து வெளியேறினாலும், பொறுப்பை உணர்ந்து கேப்டன் ரோகித் சர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவருக்கு இஷான் கிஷன் (33 ரன்), கே.எல். ராகுல் (39 ரன்) ஒத்துழைப்பு வழங்கினர். இதனிடையே ரோகித சர்மா (53 ரன் ) அரை சதம் விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். 248 ஆட்டங்களில் விளையாடி உள்ள ரோகித் சர்மா 10 ஆயிரம் ரன்களை கடந்த 5வது இந்திய வீரர் என்ற சிறப்பை பெற்றார்.

49 புள்ளி 1 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 213 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. முகமது சிராஜ் 5 ரன்களுடன் களத்தில் நின்றார். இலங்கை அணி தரப்பில் துனித் வெல்லலேகே 5 விக்கெட்டுகளும், அசலன்கா 4 விக்கெடுகளும் அள்ளினர். இருவரும் சேர்ந்து இந்திய பேட்டிங் வரிசை சீர்குலைத்தனர்.

213 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இலங்கை அணியில் பேட்டிங் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. இந்திய வீரர்களின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினர். பதுன் நிசன்கா (6 ரன்) திமுத் குணரத்னே (2 ரன்), விக்கெட் கீப்பர் குசல் மென்டிஸ் (15 ரன்) இந்திய வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர்.

தனஞ்செய டி செல்வா (41 ரன்) பந்துவீச்சில் அசத்திய துனித் வெல்லலேகே (42 ரன்) ஆகியோர் மட்டும் இலங்கை அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். இந்திய வீரர்களின் திறம் பட பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கால் ஒரு கட்டத்தில் இலங்கை வீரர்களில் பந்தை எல்லை கோட்டுக்கு அருகில் கூட கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

41 புள்ளி 3 ஓவர்களில் இலங்கை அணி 172 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியை தழுவியது. இதன்மூலம் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போடிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் விழ்த்தி அசத்திய அதே குல்தீப் யாதவ் இன்றைய ஆட்டத்திலும் 4 விக்கெட் வீழ்த்தி பிரம்மிக்க வைத்தார்.

ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், முகமது சீராஜ், ஹர்த்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் முதல் அணியாக இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் இரண்டாவது அணியை தேர்வு செய்வதில் மும்முனை போட்டி நிலவுகிறது.

இதையும் படிங்க : Hitman Records: விமர்சனங்களுக்கு மத்தியில் சாதனை மகுடம் சூடிய ரோகித் சர்மா!!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.