டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 71 ஆயிரத்து 365 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு நான்கு கோடியே 24 லட்சத்து 10 ஆயிரத்து 976 ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் ஆயிரத்து 217 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு ஐந்து லட்சத்து ஐந்தாயிரத்து 279 ஆக உள்ளது. நாட்டில் தற்போது எட்டு லட்சத்து 92 ஆயிரத்து 828 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
குணமடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 211 ஆக உள்ளது. இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை நான்கு கோடியே 10 லட்சத்து 12 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 170.87 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 74.46 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், நேற்று (பிப்ரவரி 8) மட்டும் 15 லட்சத்து 71 ஆயிரத்து 726 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.