டெல்லி: இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியாவில் நேற்றைய நிலவரப்படி(ஜன.18) ஒட்டுமொத்தமாக 158.04 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 79,91,230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன.
இன்றைய நிலவரப்படி தடுப்பூசி இருப்பு 19,92,671 டோஸ்கள் சுகாதாரப் பணியாளர்களுக்கும், 16,85,446 டோஸ்கள் முன்னணிப் பணியாளர்களுக்கும், 14,06,293 டோஸ்கள் 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோயாளிகளுக்கும் உள்ளது. அதேபோல 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு, 3,59,30,929 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி
- ஜனவரி 16, 2021: சுகாதாரப் பணியாளர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- பிப்ரவரி 2, 2021: முன்னணி ஊழியர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- மார்ச் 1, 2021: 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45-60 வயதுக்குட்பட்ட நோய்த்தொற்றுகள் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- ஏப்ரல் 1, 2021: 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- மே 1, 2021: 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- அக்டோபர் 21, 2021: 100 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்தி இந்தியா சாதனை.
- ஜனவரி 3, 2022: 15-18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- ஜனவரி 10, 2022: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்.
- ஜனவரி 16, 2022: ஓராண்டு நிறைவு 156.76 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தி சாதனை
இதையும் படிங்க: 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி திட்டம் இல்லை; சுகாதாரத்துறை