இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 92 ஆயிரத்து 596 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தப் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு கோடியே 90 லட்சத்து 89 ஆயிரத்து 69ஆக உள்ளது.
நேற்று (ஜுன்.8) மட்டும் 2 ஆயிரத்து 219 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 53ஆயிரத்து 528ஆக உயர்ந்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
அதேபோல் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை, 2 கோடியே 75 லட்சத்து 4 ஆயிரத்து 126ஆக உள்ளது. தற்போது 12 லட்சத்து 31 ஆயிரத்து 415 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் இதுவரை, மொத்தமாக 23 கோடியே 90 லட்சத்து 58ஆயிரத்து 360 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.