உலக அளவில் கரோனா பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. தினமும் புதிதாகத் தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இச்சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆகியவற்றை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த தகவல் பின்வருமாறு :
கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23 ஆயிரத்து 950 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியே 99 ஆயிரத்து ஆறாக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் நேற்று (டிச.22) ஒரேநாளில் 333 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையானது ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 444ஆக அதிகரித்துள்ளது. இதனால் உயிரிழப்பு 1.45 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இதுவரை கரோனாவால் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 96 லட்சத்து 63 ஆயிரத்து 382ஆக அதிகரித்துள்ளது. இதனால் குணமடைந்தோரின் விகிதம் 96.63 விழுக்காடாக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 26 ஆயிரத்து 895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கரோனா தொற்றுக்கு இரண்டு லட்சத்து 89 ஆயிரத்து 240 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
இதுவரை மொத்தமாக 16 கோடியே 42 லட்சம் 68 ஆயிரத்து 721 நபர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று (டிச.22) மட்டும் 10 லட்சத்து 98 ஆயிரத்து 164 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஜனவரி மாதம் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளார். 30 கோடி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.