புது டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 35 ஆயிரத்து 342 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சத்து 93 ஆயிரத்து 062 ஆக உயர்ந்துள்ளது.
38 ஆயிரத்து 704 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 4 லட்சத்து 68 ஆயிரத்து 79 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 483 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 19 ஆயிரத்து 470ஆக உயர்ந்துள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
நாட்டில் இதுவரை 42 கோடியே 34 லட்சத்து 17 ஆயிரத்து 30 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜூலை 22 வரை மொத்தம் 45 கோடியே 29 லட்சத்து 39 ஆயிரத்து 545 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
நேற்று (ஜூலை 22) ஒரே நாளில் 16 லட்சத்து 68 ஆயிரத்து 561 மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!