ஹைதராபாத்: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,506 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று 895 பேர் உயிரிழந்தத நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,08.040 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது, 4,54,118 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 24 மணி நேரத்தில் 41,526 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதன்மூலம் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,99,75,064 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
மேலும், 37,60,32,586 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், ஜூலை 10ஆம் தேதி வரை 43,08,85,470 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்துவரும் கரோனா தொற்று