டெல்லி: கிழக்கு லடாக் விவகாரத்தில் இந்தியாவும் சீனாவும் ஒன்பதாவது சுற்று கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தைகளை ஞாயிற்றுக்கிழமை (ஜன.24) நடத்த உள்ளன என்று அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் (எல்ஐசி) சீனப் பகுதியில் அமைந்துள்ள மோல்டோ எல்லைப் புள்ளியில் இராணுவப் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளன என்று அந்த வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.
முன்னதாக எட்டாவது மற்றும் கடைசி சுற்று இராணுவப் பேச்சுவார்த்தைகள் நவம்பர் 6 ஆம் தேதி நடந்தன. அப்போது இரு தரப்பினரும் குறிப்பிட்ட பகுதிகளிலிருந்து ராணுவ துருப்புக்களை வெளியேற்றுவது குறித்து பரவலாக விவாதித்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம், இந்தியா-சீனா எல்லை விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை கட்டமைப்பின் கீழ் இந்தியாவும் சீனாவும் மற்றொரு சுற்று இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தின. இருப்பினும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருந்து எவ்வித உறுதியான முடிவுகளும் எட்டப்படவில்லை.
இதையடுத்து செப்டம்பர் 21ஆம் தேதி ஆறாவது சுற்று இராணுவ பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, இரு தரப்பினரும் எல்லையில் அதிக துருப்புக்களை அனுப்பக்கூடாது, சிக்கலான நடவடிக்கை, மோதலை தவிர்ப்பது உள்ளிட்ட பல முடிவுகளை அறிவித்திருந்தனர்.
செப்டம்பர் 10ஆம் தேதி மாஸ்கோவில் நடந்த ஒரு கூட்டத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) ஒரு பக்கத்தில், வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அவரது சீன பிரதிநிதி வாங் யி இடையே எட்டப்பட்ட ஐந்து அம்ச ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்கான ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலுடன் இந்தச் சுற்று நடைபெற்றது.
இந்த உடன்படிக்கையின்படி துருப்புக்களை விரைவாக பணிநீக்கம் செய்தல், பதற்றங்களை அதிகரிக்கக்கூடிய நடவடிக்கைகளைத் தவிர்ப்பது, எல்லை மேலாண்மை தொடர்பான அனைத்து ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை பின்பற்றுவது மற்றும் எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் அமைதியை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் போன்றவை முக்கிய அம்சங்கள் ஆகும்.