ETV Bharat / bharat

அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இறங்கும் இந்தியா - சீனா! - ஹாட் ஸ்பிரிங்ஸ்

டெல்லி: கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், தீப்சாங் ஆகிய பகுதிகளிலிருந்து ராணுவ படைகளை திரும்பபெறுவது குறித்து இந்தியா, சீனா நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கவுள்ளது.

இந்திய சீன நாடுகள்
இந்திய சீன நாடுகள்
author img

By

Published : Feb 19, 2021, 9:58 PM IST

இந்திய, சீன எல்லைப் பகுதியான கிழக்கு லடாக்கில் அமைந்துள்ள பாங்காங் ஏரியின் வடக்கு மற்றும் தென்கரையிலிருந்து இந்தியா சீனா தங்களின் ராணுவ படைகளை முழுவதுமாக திரும்பப்பெற்றுள்ளது. இந்நிலையில், கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ், தீப்சாங் ஆகிய பகுதிகளிலிருந்து ராணுவ படைகளை திரும்பபெறுவது குறித்து இந்திய, சீன நாடுகள் நாளை நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கவுள்ளன.

இரு நாடுகளுக்கிடையே, ராணுவ ரீதியிலான 10ஆம் கட்ட உயர்மட்ட பேச்சுவார்த்தை சீனப் பகுதியில் அமைந்துள்ள மோல்டோவில் நாளை நடைபெறவுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, ராணுவ திரும்பபெறும் நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா தனது படைகளை நீண்ட தொலைவுக்கு பின்வாங்கியுள்ளது.

ராணுவ ரீதியாகவும் ராஜாங்க ரீதியாகவும் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய, சீன நாடுகள் படைகளை திரும்பபெற்றுக்கொள்ள சம்மதித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. படைகள் திரும்பபெற்ற பிறகு, மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவாக எடுத்துரைத்ததாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.