ETV Bharat / bharat

இந்தியா- சீனா எல்லை பிரச்னை: நிரந்திர தீர்வு - பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கு விரையில் தீர்வு காண இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இதன்படி இருநாட்டு ராணுவங்களும் எல்லைப் பகுதிகளிலிருந்து வீரர்களைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டன.

இந்தியா- சீனா எல்லை பிரச்னை: நிரந்திர தீர்வு

author img

By

Published : Nov 11, 2020, 4:24 PM IST

இந்தியா-சீனா எல்லைத் தகராறு தொடர்பான 8ஆவது கார்ப்ஸ் கமாண்டர் நிலை பேச்சுவார்த்தை நவம்பர் 6ஆம் தேதி சுஷூலில் நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள தங்களது ராணுவப்படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இதில் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் நவீன் ஸ்ரீவாஸ்தவா கலந்துகொண்டார்.

பாங்காங் ஏரி பகுதியில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில், மூன்று கட்டங்களாக ராணுவப் படையை திரும்பப் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதல்கட்டமாக இருநாட்டு ராணுவத்தின் டாங்கிகள், ஆயுதப்படை வாகனங்கள் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து கணிசமான தூரத்திற்கு பின்வாங்க வேண்டும்.

பங்காங் ஏரியின் வடக்கு கரையின் அருகே மேற்கொள்ளப்படவுள்ள இரண்டாவது கட்டத்தில், இருதரப்பினரும் சுமார் 30 விழுக்காடு துருப்புகளை, ஒவ்வொரு நாளாக மூன்று நாள்களுக்குத் திரும்பப் பெற வேண்டும்.

மூன்றாவது மற்றும் கடைசி கட்டத்தில், இரு தரப்பினரும் பங்காங் ஏரி பகுதியின் தெற்கு கரையோரத்தில் இருந்து முற்றிலும் விலக வேண்டும். இதில் சுஷுல் மற்றும் ரெசாங் லா பகுதியைச் சுற்றியுள்ள பிரதேசங்களும் அடங்கும்.

படைகளைத் திரும்ப பெற்றுக்கொள்ளும் இருநாடுகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க ஆளில்லா விமானம், பிரதிநிதிகள் மூலம் சரிபார்க்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இந்தாண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதனால் சீனாவின் மீது நம்பிக்கை இல்லா நிலைப்பாட்டை இந்தியா கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் நம்பகமான பாதுகாப்புக் குழு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் தோவல், மூப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவத் தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவணே உள்ளிட்டோர் வலுவான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

சீனாவின் ஆக்கிரமிப்புகளை தடுக்க ஏதுவாக எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் 60 ஆயிரம் ராணுவ வீரர்களை இந்தியா, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.