ETV Bharat / bharat

சனாதனம் குறித்து INDIA கூட்டணி கூட்டத்தில் ஆலோசனை - டிஆர் பாலு தகவல் - சனாதன

இந்தியா ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலினின் சனாதன குறித்த கருத்துக்கள் ஆலோசிக்கப்பட்டு அனைத்து கட்சியினரும் சேர்ந்து ஒரு முடிவை எடுத்து உள்ளதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு தெரிவித்து உள்ளார்.

‘I.N.D.I.A’ கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 14, 2023, 1:30 PM IST

Updated : Sep 14, 2023, 3:04 PM IST

டெல்லி: இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் நேற்று (செப் 13) நடைபெற்றது. இக்கூட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அபிஷேக் பானர்ஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரானதால் மற்ற 12 கட்சியினர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு கூறுகையில், "சட்டமன்ற தேர்தலுக்கான, தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தொடங்க முடிவு செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து மாநில வாரியாக கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வேட்பாளர்களைத் தேர்வு செய்வார்கள். இந்தாண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும், இந்தியா கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தில் கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள். இந்த முதல் பொதுக்கூட்டம் அக்டோபர் மாதத்தின் முதல் வாரம் மத்திய பிரதேசம் போபாலில் நடைபெற உள்ளது. இந்தாண்டு இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: இந்தியா அமெரிக்காவின் பொருளாதார வழித்தடப்பாதை.. மோடி, பைடனின் தேர்தல் வெற்றிக்கு உதவுமா?

நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக்குப் பின் இந்தியா கூட்டணிக் கட்சியின் கூட்டம் நடைபெறும். மேலும், இந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் உதயநிதியின் சனாதன கருத்து குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து ஒரு முடிவை எடுக்க முடிவு செய்துள்ளோம்.

இந்தியா கூட்டணியின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் செப்டம்பர் முதல் வாரம் நடைபெற்ற நிலையில் 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டது. 13 நபர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு உள்ள நிலையில், மீதமுள்ள ஒருவர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "நீதித் துறை நிர்வாகத்தை பாதிக்கிறதா ஊடகங்கள்...?" உச்ச நீதிமன்றம் கூறும் கருத்து என்ன?

Last Updated : Sep 14, 2023, 3:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.