பல்லேகலே (இலங்கை): இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 2-0 என்று வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது.
இரண்டாவது ஒரு நாள் ஆட்டம், பல்லேகலே சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 173 ரன்களை எடுத்தது.
பின்னர் விளையாடிய இந்திய அணியின் தொடங்க வீராங்கனைகளான ஷஃபாலி வர்மா, ஸ்மிருதி மந்தனா ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இலங்கையின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டனர்.
ஷஃபாலி வர்மா 71 பந்துகளில் 71 ரன்கள் மற்றும் ஸ்மிருதி மந்தனா 83 பந்துகளில் 93 ரன்கள் விளாசிய நிலையில், இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இதையும் படிங்க: ENG vs IND Final Test: பும் பும் பும்ரா... மிரட்டிய இந்தியா - நொந்து போன இங்கிலாந்து