இந்தியாவுக்கும் வங்கதேசத்திற்கும் இடையே எல்லை தொடர்பான பேச்சுவார்த்தை ஆண்டுக்கு இரு முறை நடைபெறுவது வழக்கம். ராணுவ உயர்மட்ட அலுவலர்களுக்கு இடையே 1993ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவரும் இந்தப் பேச்சுவாரத்தை வழக்கமாக டெல்லியிலோ அல்லது வங்கதேச தலைநகர் தாக்காவிலோ நடைபெறும்.
ஆனால், இந்த முறை வரும் டிசம்பர் 22ஆம் தேதி நடைபெறும் 51ஆம் பேச்சுவார்த்தை அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அஸ்ஸாம் தலைநகர் கவுகாத்தியில்தான் எல்லை பாதுகாப்பு படையின் எல்லை தலைமையகம் அமைந்துள்ளது.
4096 மீட்டர் நீளமுள்ள இந்திய வங்கதேச எல்லையின் ஒரு பகுதியை எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாத்துவருகின்றனர். அதேபோல வங்கதேச தரப்பில் இருந்து வங்கதேச எல்லைக் காவல்படை பாதுகாத்துவருகின்றனர். இரு தரப்பும் எல்லையில் நடைபெறும் குற்றச் சம்வபங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆண்டுக்கு இரு முறை கூடி ஆலோசிப்பது வழக்கம்.
அதன்படி, கூட்டு எல்லை பாதுகாப்பு மேலாண்மை, பாதுகாப்பற்ற பகுதிகளில் வேலி அமைத்தல், எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட விஷயங்களை இந்தியா இந்தாண்டு கூட்டத்தில் எழுப்பவுள்ளது. அதே வேளையில், தனது நாட்டு மக்களை இந்திய ராணுவம் கொல்வது குறித்த பிரச்னைகளை வங்கதேசம் பேசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: விவசாயிகளின் பிரச்னைகளுக்கு முடிவுகட்டப்படுமா?