ETV Bharat / bharat

IND Vs PAK : ஆசிய கோப்பை கிரிக்கெட் - இந்தியாவா? பாகிஸ்தானா? இன்று லீக் ஆட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 6:52 AM IST

Asia Cup 2023 IND Vs Pak : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (செப். 2) நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் வருண பகவானின் குறுக்கீடும் இருக்கும் என கூறப்படுவதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்துடன் காணப்படுகின்றனர்.

Cricket
Cricket

பல்லேகலே : 16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியன் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், நேபாளம் உள்ளிட்ட 6 நாடுகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. இதில் இன்று (செப். 2) இலங்கை பல்லேகலேவில் நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன.

பாகிஸ்தான் அணி தொடர் தொடங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை விளையாடி வருகிறது. நேபாளம் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் 238 ரன்கள் வித்தியாசத்தில் வென்று வரலாற்று சாதனை படைத்தது. தொடர்ந்து இன்று (செப். 2) இந்திய அணியை எதிர்கொள்கிறது.

பொதுவாகவே இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே ஆடுகளத்தில் அனல் பறக்கும், அதுவும் ஆசியக் கண்டத்தில் யாரது கை ஓங்கி இருக்கிறது என்பதை நிர்ணயிக்கும் வகையில் இந்த ஆட்டம் இருக்கும் என்பதால் விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது. வெற்றிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக உழைப்பார்கள்.

இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் களமிறங்க வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது. காயத்தில் இருந்து பூரண குணமடைந்த பிறகும் உடற்தகுதி காரணமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடாமியில் அவர் இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்து உள்ளார்.

கே.எல். ராகுல் செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெறும் நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் களமிறங்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக சுப்மான் கில் களமிறங்குவார் எனத் தெரிகிறது. இந்திய அணியில் விராட் கோலி, இஷான் கிஷன், ஸ்ரேயஸ் அய்யர் உள்ளிட்டோர் வலுசேர்க்கும் வகையில் உள்ளனர்.

பந்துவீச்சை பொறுத்தவரை ரவீந்திர ஜடேஜா, நீண்ட நாட்களுக்கு பின் களமிறங்கும் குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பேட்டிங் ஆர்டர் சிறப்பாக உள்ளது. கடந்த நேபாளம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்டன் பாபர் அசாம் சிறப்பாக செயல்பட்டார்.

Training hard!

Intense practice session for the Pakistan team ahead of their epic clash against India tomorrow! 🔥#AsiaCup2023 pic.twitter.com/sZVHbj4Ast

— AsianCricketCouncil (@ACCMedia1) September 1, 2023 ">

இந்த ஆட்டத்திலும் இந்திய அணிக்கு அவர் கடும் சவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இமாம் உல் ஹக் உள்ளிட்ட வீரர்களும் சிறப்பாக செயல்படும்பட்சத்தில் இந்திய அணிக்கு கடுமையான நெருக்கடியாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை. இதற்கு முன்னதாக இவ்விரு அணிகளும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் மோதின, அதில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு ஆட்டம் தொடங்குகிறது. போட்டி நடைபெறும் பல்லேகலே மைதானத்தில் மழை பெய்ய 90 சதவீதம் வரை வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருப்பதால், இன்றைய ஆட்டத்தில் வருண பகவானின் தலையீடும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 📸📸 A quick round up from the NCA High Performance Camp for Spin and Fast Bowling Emerging All Rounders.

    The participants went through drills to strengthen both facets of their game to have them in equal measure 👌👌 pic.twitter.com/xHWOFWzDrZ

    — BCCI (@BCCI) September 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல் :

இந்தியா : ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அக்சர் படேல், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா.

பாகிஸ்தான் : பகார் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஆகா சல்மான், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ரவுப்.

இதையும் படிங்க : நம்பர் 1 தான் குகேஷின் இலக்கு..! கிராண்ட் மாஸ்டரின் பயிற்சியாளர் பிரத்யேக பேட்டி..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.