ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் ஆய்வுசெய்து மனிதவள மேம்பாட்டின் குறியீடு பற்றி தரவரிசை அட்டவணை வெளியிட்டுவருகிறது.
நாட்டின் வளர்ச்சியை அளவிட...
ஒரு நாட்டில் வாழும் மக்களின் வாழ்நாள், ஆரோக்கியமான வாழ்வு, அனைத்துச் செய்திகளும் எளிதாக கிடைப்பது, வசதிகள் உள்பட பல்வேறு முக்கிய அம்சங்களைக் கருத்தில்கொண்டு உலகளவில் நாடுகளை அந்த அமைப்பு தரவரிசைப்படுத்துகிறது.
இந்த மனிதவள மேம்பாட்டின் குறியீட்டை பாகிஸ்தான் பொருளாதார வல்லுநர் மஹ்புப் உல் ஹக் 1990இல் உருவாக்கினார், இது ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தால் (யு.என்.டி.பி.) நாட்டின் வளர்ச்சியை அளவிட மேலும் பயன்படுத்தப்பட்டது.
இந்தியா பின்னடைவு
இந்த ஆண்டுக்கான மனிதவள மேம்பாட்டு குறித்த தரவரிசை அட்டவணையை ஐ.நா. தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, 129ஆவது இடத்திலிருந்து இரண்டு இடங்கள் குறைந்து 0.645 புள்ளிகளுடன் இந்தியா 131ஆவது இடத்தில் உள்ளது.
எச்.டி.ஐ குறியீட்டில் இந்தியாவின் செயல்திறன்
ஆண்டு | இந்தியா தரவரிசை |
2020 | 131 |
2019 | 129 |
2018 | 130 |
2017 | 131 |
2016 | 131 |
2015 | 130 |
2014 | 135 |
யுஎன்டிபி எச்டிஐ அறிக்கை 2020 இல் இந்தியா தொடர்பான அறிக்கையை காண்போம்:
- மனித வளர்ச்சியில் மேம்பாடு: பெண்கள், சிறுமிகள் கல்வியில் இந்தியர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். பொருளாதர ரீதியாகப் பெண்கள் வலுப்பெறுவது, வறுமையை ஒழித்திட பெரிதும் உதவுகிறது. அதே சமயம், பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி பாலின ரீதியான குற்றங்கள் குறைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நிலத்தைச் சொந்தமாக வைத்திருப்பது பெண்களுக்கு சமூகத்தில் அதிகாரம் கூடுகிறது.
- இந்தியாவில், பெற்றோர்களின் செயல்பாடுகளில் பல வகையான மாற்றங்களைக் காண முடியும். சிலர் சிறுமிகளின் உடல்நலம், கல்வியில் கவனம் செலுத்துவது கிடையாது. இதன் விளைவு, அவர்களின் உடலில் அதிக ஊட்டச்சத்துக் குறைபாட்டை காண முடிகிறது.
- பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ், இந்தியா தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு அளவை 2030-க்குள் 33-35 விழுக்காடு குறைப்பதாகவும், இதன்மூலம் புதைபடிவ மற்ற எரிபொருள் மூலங்களிலிருந்து 40 விழுக்காடு மின்சார ஆற்றல் திறனைப் பெறுவதாகவும் உறுதியளித்தது.
- மேலும், இந்தியா தனது சூரிய மின் திறனை 2014 மார்ச்சில் 2.6 ஜிகாவாட்டிலிருந்து 2019 ஜூலை மாதம் 30 ஜிகாவாட்டாக உயர்த்தியுள்ளது. 20 ஜிகாவாட் என்ற இலக்கை நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே அடைந்தது. மேலும், 10 மில்லியன் மக்கள் வசிக்கும் சென்னையில், மோசமான உள்கட்டமைப்பின் காரணமாக தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. பெரும்பாலனோர் சாலையில் தண்ணீருக்காக மோதிக்கொண்டனர்.
- இந்தியாவிலும் மெக்ஸிகோவிலும் கற்பித்தல் பெரும்பாலும் புத்தகம் அடிப்படையிலானதாகக் காணப்படுகிறது. இதன் விளைவு, சில சமயங்களில் தீர்வுகளைக் காண்பதில் சிரமப்படுகின்றனர்.
அண்டை நாடுகளுடன் இந்தியா - ஒப்பீடு
தரம் | நாடுகள் | மனிதவளக் குறியீட்டின் மதிப்பு (2019) | சராசரி வாழ்நாள் வயது (ஆண்டுகளில்) SDG 3 | பள்ளிப்படிப்பின் எதிர்பார்க்கப்பட்ட சராசரி (ஆண்டுகள்) SDG 4.3 | பள்ளிப்படிபப்பின் சராசரி (ஆண்டுகளில்) SDG 4.6 | நாட்டின் மொத்த வருவாய் SDG 8.5 | |
131 | இந்தியா | 0.645 | 69.7 | 12.2 | 6.5 | 6,681 | |
72 | இலங்கை | 0.782 | 77.0 | 14.1 | 10.6 | 12,707 | |
85 | சீனா | 0.761 | 76.9 | 14.0 | 8.1 | 16,057 | |
95 | மாலத்தீவு | 0.740 | 78.9 | 12.2 | 7.0 | 17,417 | |
129 | பூட்டான் | 0.654 | 71.8 | 13.0 | 4.1 | 10,746 | |
133 | பங்களாதேஷ் | 0.632 | 72.6 | 11.6 | 6.2 | 4,976 | |
142 | நேபாளம் | 0.602 | 70.8 | 12.8 | 5.0 | 3,457 | |
147 | மியான்மர் | 0.583 | 67.1 | 10.7 | 5.0 | 4,961 | |
154 | பாகிஸ்தான் | 0.557 | 67.3 | 8.3 | 5.2 | 5,005 |
எச்.டி.ஐ. குறியீட்டில் இலங்கை, சீனா, மாலத்தீவு, பூட்டான் ஆகியவை இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளன, அதேசமயம் வங்கதேசம் இந்தியாவைவிட இரண்டு இடங்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது.