ETV Bharat / bharat

Ind VS NZ 2nd T20: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி!

author img

By

Published : Jan 29, 2023, 10:51 PM IST

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா
இந்தியா

லக்னோ: மிட்செல் சான்டனர் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் தொடரை 3-க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.

தொடர்ந்து ஜார்க்கண்டில் கடந்த 27ஆம் தேதி நடந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி லக்னோவில் இன்று (ஜன.29) நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய விக்கெட் கீப்பர் டிவென் கான்வாய், பின் ஆலென் பெரிய அளவில் சோபிக்கவில்லை. தலா 11 ரன்கள் மட்டும் சேர்த்து நடையைக் கட்டினர். இந்திய பந்துவீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சுக்கு முன் நியூசிலாந்து வீரர்களின் அதிரடி ஆட்டம் எடுபடவில்லை.

அடுத்தடுத்து களமிறங்கிய நியூசிலாந்து வீரர்களை நிலைத்து நிற்பதற்குள், அவுட்டாக்கி இந்திய வீரர்கள் வெளியேற்றினர். மார்க் சாப்மன் 14 ரன், டேரி மிட்செல் 8 ரன், கிளன் பிலிப்ஸ் 5 ரன் என அடுத்தடுத்து நடையைக் கட்டினர். அதிகபட்சமாக கேப்டன் மிட்டெல் சான்டனர் மட்டும் 19 ரன்கள் குவித்தார்.

20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. இந்திய பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட் வீழ்த்தினார். மற்றபடி கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா, தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

100 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. நியூசிலாந்து வீரர்கள் திறம்பட பந்துவீசி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். சுப்மான் கில் 11 ரன், விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் 19 ரன்களில் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து வீரர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு மற்றும் தரமான பீல்டிங்கால் இந்திய வீரர்கள் விளாசும் பந்து எல்லைக் கோட்டிற்கு செல்ல பதறியது.

இறுதி ஓவரில் 2 பந்துகளுக்கு, 3 ரன் தேவைப்பட்ட நிலையில், நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் பவுண்டரி அடித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். 19.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டி கொண்ட டி20 தொடரை இந்திய அணி 1-க்கு 1 என்ற கணக்கில் சமனில் கொண்டு வந்தது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 1ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று டி20 தொடரிலும் நியூசிலாந்து அணியை ஒயிட் வாஷ் செய்ய இந்திய அணி முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இதையும் படிங்க: VIDEO: பூமியை நெருங்கும் வால் நட்சத்திரம்; கண்காணிக்க தயாராகும் ஆய்வகம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.