ETV Bharat / bharat

Income Tax: ரூ.7 லட்சம் வரை இனி வரி செலுத்த தேவையில்லை! - வருமான வரி உச்ச வரம்பு

மத்திய பட்ஜெட்டில் வருமான வரி உச்ச வரம்பை உயர்த்தி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். வரி இல்லா உச்சவரம்பை 3 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

வருமான வரி
வருமான வரி
author img

By

Published : Feb 1, 2023, 12:48 PM IST

Updated : Feb 1, 2023, 1:16 PM IST

டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த முழு பட்ஜெட் இதுவாகும்.

நடுத்தர மக்கள் எதிர்பார்த்தது போல மத்திய பட்ஜெட்டில் பல்வேறு கவர்ச்சிகர அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். தனி நபர் வருமான வரி உச்ச வரம்பு 7 லட்ச ரூபாயாக உயர்வு. புதிய வரி முறையில் உள்ளவர்களுக்கு ஆண்டுக்கு மொத்த வருமானம் 7 லட்ச ரூபாய் வரை வருமான வரி கிடையாது என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்புத் திட்டத்தின் கீழ், தனி நபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு 5 லட்சத்திலிருந்து 7 லட்சமாக மாற்றியமைத்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஆண்டுக்கு 9 லட்ச வரை வருமானம் பெறுகிறவர்கள் 45 ஆயிரம் ரூபாய் வரை வரி செலுத்தினால் போதுமானது என அறிவிக்கப்பட்டு உள்ளது. 3 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வருமான வரி கிடையாது. 3 லட்சத்தில் 6 லட்சம் வரை வருமானம் பெறுகிறவர்களுக்கு 5 சதவீதமும், 6 லட்சத்திலிருந்து 9 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் 10 சதவீதம் வரை வருமான வரி செலுத்த வேண்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 9 லட்சத்திலிருந்து 12 லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் 15 சதவீதமும், 12 லட்சத்திலிருந்து 15 லட்ச ரூபாய் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் 20 சதவீதமும் வரி செலுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 15 லட்சத்திற்கு மேல் ஆண்டு வருமானம் பெறுபவர்கள் 30 சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இதையும் படிங்க: நாடு முழுவதும் 157 புதிய நர்சிங் கல்லூரிகள்.. மானியத்தில் வீடு திட்டத்தில் கூடுதல் நிதி!

Last Updated : Feb 1, 2023, 1:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.