ETV Bharat / bharat

எம்ஜிஎம் குழுமத்தில் ரெய்டு! தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி விவகாரம் காரணமா? - tamilnadu mercantile bank

பொழுது போக்கு பூங்காக்கள் நடத்தும் எம்ஜிஎம் குழுமத்திற்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகிறது

ரெய்டு
ரெய்டு
author img

By

Published : Jun 15, 2022, 8:37 AM IST

Updated : Jun 15, 2022, 12:50 PM IST

தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் ஏற்றுமதி இறக்குமதி, மதுபான தயாரிப்பு, மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகள், வெளிநாட்டு வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் எம்ஜிஎம் குழுமம் ஈடுபட்டு வருகிறது. இக்குழுமத்தின் பெயரில் சென்னையில் பொழுது போக்கு பூங்கா ஒன்றும் இயங்கி வருகிறது. இந்திய அளவில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக எம்.ஜி.எம் குழுமம் திகழ்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று காலை முதல் எம்ஜிஎம் குழுமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னை, நெல்லை, செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சுமார் 200-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

income tax raid
வருமான வரித்துறை ரெய்டு

கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 46 ஆயிரம் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், முறைகேடு நடந்திருப்பதாக கூறி ரிசர்வ் வங்கி சார்பில் அமலாக்கத் துறையினரிடம் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் முன்னாள் தலைவர் எம்ஜிஎம் மாறன் சிங்கப்பூரில் பல கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை வங்கியில் வைத்துக் கொண்டு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பரிவர்த்தனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவருக்கு 35 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

income tax raid
வருமான வரித்துறை ரெய்டு

அமலாக்கத்துறையினரின் தொடர் விசாரணையில், எம்ஜிஎம் மாறனுக்கு சொந்தமான 500 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனையில் அமலாக்கத் துறை வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விவகாரத்தில் நடப்பது என்ன? - ஓர் அலசல்

Last Updated : Jun 15, 2022, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.