ஸ்ரீநகர்: மின்சார வாகன பேட்டரி தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் உலோகம், டன் கணக்கிலான அளவில் ஜம்மு காஷ்மீர் நிலத்தடியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக ஜம்மு காஷ்மீரில் 59 லட்சம் டன் லித்தியம் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரும்பு அல்லாத உலோகமான லுத்தியம், மின்சார வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் முக்கிய கூறாக விளங்குகிறது. ரியாசி மாவட்டத்தில் உள்ள சலல் ஹய்மனா பகுதியில், 59 லட்சம் டன் அளவிலான லித்தியம் போன்ற உலோகத்தை இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டுபிடித்து உள்ளதாக மத்திய கனிமவளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுரங்கம் மற்றும் கனிமவளம் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "லித்தியம், தங்கம் உள்ளிட்ட 51 கனிமவளங்கள் இருக்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அது குறித்த தகவல்கள் அந்தந்த மாநில அரசுகளிடம் வழங்கப்பட்டு வருகிறது.
-
Geological Survey of India has for the first time established 5.9 million tonnes inferred resources (G3) of lithium in Salal-Haimana area of Reasi District of Jammu & Kashmir (UT).@GeologyIndia
— Ministry Of Mines (@MinesMinIndia) February 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
1/2 pic.twitter.com/tH5uv2BL9m
">Geological Survey of India has for the first time established 5.9 million tonnes inferred resources (G3) of lithium in Salal-Haimana area of Reasi District of Jammu & Kashmir (UT).@GeologyIndia
— Ministry Of Mines (@MinesMinIndia) February 9, 2023
1/2 pic.twitter.com/tH5uv2BL9mGeological Survey of India has for the first time established 5.9 million tonnes inferred resources (G3) of lithium in Salal-Haimana area of Reasi District of Jammu & Kashmir (UT).@GeologyIndia
— Ministry Of Mines (@MinesMinIndia) February 9, 2023
1/2 pic.twitter.com/tH5uv2BL9m
இந்த 51 உலோக தாதுக்கள் சுரங்கத்தில், 5 சுரங்கங்களில் தங்கம் உள்ளது. மற்ற சுரங்கங்களில் பொட்டாசியம், மாலிப்டினம் உள்ளிட்ட பல்வேறு உலோகங்கள் உள்ளன. ஜம்மு காஷ்மீர், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத், ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய 11 மாநிலங்களில் இந்த 51 சுரங்கங்கள் உள்ளன.
கடந்த 2018 - 19 ஆண்டில் இருந்து இந்த இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு தொடர்ந்து தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நிலக்கரி மற்றும் லிக்னைட் தாதுக்கள் தொடர்பாக 17 அறிக்கைகள் மத்திய நிலக்கரி அமைச்சகத்திடம் வழங்கப்பட்டு 7 ஆயிரத்து 897 மில்லியன் டன் நிலக்கரி தாதுக்கள் தொடர்பாக தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக" தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தண்ணீர் தராத ஆத்திரத்தில் பாதுகாவலர் அடித்துக் கொலை.. நேபாள இளைஞர் கைது!