ETV Bharat / bharat

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் கணவன், மனைவி நீதிபதிகளாக நியமனம்!

ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் முதல் முறையாக கணவன், மனைவி நீதிபதிகளாக பணியாற்ற உள்ளனர்.

Rajasthan HC
Rajasthan HC
author img

By

Published : Jun 4, 2022, 6:25 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதிகளாக குல்தீப் மாத்தூர் மற்றும் சுபா மேத்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். குல்தீப் மாத்தூர், வழக்கறிஞர் ஒதுக்கீட்டிலிருந்தும், சுபா மேத்தா நீதித்துறை சேவை ஒதுக்கீட்டிலிருந்தும் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நீதிபதி சுபா மேத்தாவின் கணவர் மகேந்திர கோயல், ஏற்கனவே ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். இதனால் கணவன், மனைவி இருவரும் ஒரே நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றப் போகிறார்கள்.

ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் கணவன், மனைவி நீதிபதிகளாக பணியாற்றுவது இதுவே முதல்முறை. இந்தப் புதிய நியமனங்கள் மூலம் ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 25ஆல் இருந்து 27 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் 23 பணியிடங்கள் இன்னும் காலியாகவே உள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க:'அரசு என்னை கொல்ல திட்டம் தீட்டுகிறது'- ராகேஷ் திகாயத்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.