டெல்லி : நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்களான ஹர்ஷ் மந்தர், அஞ்சலி பரத்வாஜ், ஜெக்தீப் சோக்கர் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், “கோவிட் பெருந்தொற்று பரவல், பொதுமுடக்கம் காரணமாக குடிபெயர் தொழிலாளர்கள் மற்றும் எளிய மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்துவருகின்றனர். இவர்களுக்கு நிவாரண உதவிகள் கிடைப்பதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன” எனவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எம்ஆர் ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், “வருகிற ஜூலை 31ஆம் தேதிக்குள் அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.
மேலும், “அரசின் திட்டங்கள் குடிபெயர் தொழிலாளிகளுக்கு கிடைக்கும் வகையில், மத்திய அரசு தேசிய தகவல் மையத்தின் உதவியுடன் , இணையம் ஒன்றையும் உருவாக்க வேண்டும்” எனவும் கூறினர்.
இதையும் படிங்க : ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி!