டெல்லி: தேசிய அளவிலான கல்வி நிறுவனங்களை தரவரிசைப்படுத்த "தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு" (NIRF- National Institutional Ranking Framework) உதவிபுரிகிறது.
இதன்மூலம், பல்கலைக்கழங்கள், மருத்துவக் கல்வி நிறுவனங்கள், பொறியியல் கல்வி நிறுவனங்கள், மேலாண்மை கல்வி நிறுவனங்கள், கல்லூரிகள், கலை கல்லூரிகள் போன்ற பிற உயர்கல்வி நிறுவனங்கள் அதன் செயல்பாடுகளைப் பொறுத்து தனித்தனி பிரிவுகளின் கீழ் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.
5ஆவது இடத்தில் கோவை பல்கலை.,
இந்நிலையில், வெவ்வேறு பிரிவுக்களுக்கான கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (செப்.9) வெளியிட்டுள்ளார்.
அதில், ஒட்டுமொத்த நிறுவனங்களின் தரவரிசையில் ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தை மீண்டும் பிடித்துள்ளது. அதற்கடுத்து, ஐஐடி பெங்களூரூ, ஐஐடி மும்பை ஆகியவை இரண்டாம், மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. ஐஐடி சென்னை முதல் இடம் பெறுவது இது மூன்றாவது முறையாகும்.
பல்கலைக்கழகங்கள் தரவரிசையில் கோயம்புத்தூர் அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகம் ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது. பொறியியல் கல்வி நிறுவனங்கள் தரவரிசையில் திருச்சி என்ஐடி ஒன்பதாவது இடத்தில் உள்ளது. மேலாண்மை தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து எந்த நிறுவனமும் இடம்பெறவில்லை.
மேலும், கல்லூரிகள் தரவரிசையில் சென்னை லயோலா கல்லூரி மூன்றாம் இடத்திலும், கோயம்புத்தூர் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி, சென்னை பிரசிடென்சி கல்லூரி முறையே ஆறாம், ஏழாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.