ETV Bharat / bharat

ஐஐடி கான்பூரில் எம்.டெக் மாணவர் தற்கொலை! - National News

IIT Kanpur M.Tech Student Suicide: கான்பூர் ஐஐடியில் எம்.டெக் பயிலும் மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

iit kanpur mtech student commits suicide
ஐஐடி கான்பூரில் எம்.டெக் மாணவர் தற்கொலை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 11, 2024, 11:15 AM IST

கான்பூர் (உத்தரப் பிரதேசம்): உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் நகர் பகுதியில் உள்ள கர்கேடாவில் அமைந்துள்ள லட்சுமி விஹார் காலனியில் வசிக்கும் நேம்சந்த் மீனா என்பவரின் மகன் விகாஸ் மீனா. இவர் கான்பூரில் உள்ள ஐஐடியில் இரண்டாம் ஆண்டு எம்.டெக் படித்து வந்தார்.

இந்த நிலையில், கான்பூர் ஐஐடியில் எம்.டெக் பயிலும் மாணவரான விகாஸ் மீனா, நேற்று (ஜன.10) இரவு அவர் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து, போலீசாருக்கு இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கல்யாண்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், தடயவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, தடயங்களை சேகரித்த பின்னர், மாணவர் விகாஸ் மீனாவின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுமட்டுமல்லாது, தற்கொலை செய்து கொண்ட மாணவருடன் பயிலும் சக மாணவர்கள் மற்றும் பாடம் கற்பிக்கும் பேராசிரியர்கள் ஆகியோரிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், அந்த மாணவர் மன அழுத்தத்தின் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக, கான்பூர் ஐஐடியில் உயிரியல் மற்றும் பயோ பொறியியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியை தொடர்ந்து வந்த மாணவியான பல்லவி சில்கா என்பவர், கடந்த 2023 டிசம்பர் 19ஆம் தேதி தனது விடுதி அறையிலேயே தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதுகலை ஆராய்ச்சி மாணவி பல்லவி சில்காவின் மரணம், ஐஐடி கான்பூரில் ஏற்படுத்திய அதிர்ச்சி அலைகள் ஓய்வதற்கு முன்பு, தற்போதுஎம்.டெக் பயிலும் மாணவரான விகாஸ் மீனா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கான்பூர் ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைச் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் சூழல் வருத்தத்திற்குரிய விஷயமாக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்களும், கல்வியாளர்களும் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை எண்ணத்தைக் கைவிடுக: சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள். சிநேகா தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 044-24640050, மாநிலத் தற்கொலைத் தடுப்பு உதவி எண் - 104, இணைய வழித் தொடர்புக்கு - 022-25521111, மின்னஞ்சல்-help@snehaindia.org நேரில் தொடர்புகொள்ள சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட் 11, பூங்கா சாலை (பார்க் வியூ ரோடு), ஆர்.ஏ.புரம் சென்னை - 600028

இதையும் படிங்க: மீண்டும் அரசியல் காய் நகர்த்தும் அம்பதி ராயுடு - பவன் கல்யாண் உடன் 3 மணிநேரம் பேச்சுவார்த்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.