டெல்லி : நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, விவசாயிகளின் வாழ்வை மீட்டெடுக்க கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.
இது குறித்து பிரியங்கா காந்தி மேலும் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி அவர்களே வேளாண் சட்டங்களை திரும்ப பெறுங்கள். நாட்டின் உணவு பாதுகாப்பு அச்சுறுத்தலில் உள்ளது. நாட்டில் உணவு பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனில், வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவது அவசியம்” எனத் தெரிவித்திருந்தார்.
கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுக்க விவசாயிகள் போராட்டம் நடத்திவருகிறார்கள். குறிப்பாக பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்தரப் பிரதேச விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள்.
இவர்கள் தவிர டெல்லி ஜந்தர் மந்தரில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் சிறப்பு அனுமதி பெற்று போராட்டம் நடத்தினார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : தேர்தல் வன்முறை: உ.பி. அரசை சாடும் ராகுல், பிரியங்கா