சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் கரோனா தொற்று பரவல் தொடர்பாக விரிவான ஆய்வு அறிக்கையை ஆகஸ்ட் 17ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வில் கோவிட்-19 வைரஸுக்கு எதிராக தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டாலும் கரோனா தாக்கும்
இந்த ஆய்வின் முடிவில் தடுப்பூசி செலுத்திய நபர்களுக்கும் டெல்டா வகை தொற்று பாதிப்பு ஏற்படும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேவேளை தடுப்பூசி செலுத்தியவர்கள், செலுத்தாதவர்களை ஒப்பிடும்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்களில் உயிரிழப்பு குறைவாகவே ஏற்படுகிறது என ஆய்வு தெரிவிக்கிறது.
இரண்டாம் அலை தீவிரமாக பாதித்த நகரங்களில் ஒன்றான சென்னையில், மொத்தம் 3,790 நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 373 பேர் தடுப்பூசி செலுத்தியவர்கள்; 3,417 பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள்.
ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்களில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, உருமாறிய கரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டால் உயிரிழப்பு ஏற்படுவதில்லை என ஆய்வு தெரிவிக்கிறது.
இதையும் படிங்க: நாடாளுமன்ற நிலைக்குழு ஜம்மு காஷ்மீர் பயணம்