பர்கார்க்: ஒடிசா மாநிலத்தில் பர்கார்க் மாவட்டத்தில் உள்ள ஷோகேலா சிறையில் கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அவரின் கைகளில் அவரது மனைவியின் பெயரை ஐ லவ் யூ என்று எழுதியிருந்தார். இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு மனைவியை வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தி கொன்றதற்காக கைது செய்யப்பட்டிருந்தார்.
ஒடிசாவில் உள்ள பெட்டுபள்ளி கிராமத்தில் சோகேலா காவல்நிலையத்தில் இரு தினங்களுக்கு முன் 35 வயதான மோகித் ராவத் அவரது மனைவி மஞ்சுவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது அவரின் உடல் சோகேலா சிறையில் உள்ளது.
மேலும் அவரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் தற்கொலை செய்து கொண்டதை உறுதிபடுத்தினர். இந்த தற்கொலை சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் மோகித்தின் மனைவி மஞ்சு கையில் மோகித்தின் பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:விஷம் வைத்தும் சாகல.. காதலருடன் கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி!