ETV Bharat / bharat

ராஜஸ்தானில் 10 குவிண்டால் வெடிபொருட்கள் பறிமுதல்

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் 10 குவிண்டால் வெடிபொருட்கள், 65 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ராஜஸ்தானில் 10 குவிண்டால் வெடிபொருட்கள் பறிமுதல்
ராஜஸ்தானில் 10 குவிண்டால் வெடிபொருட்கள் பறிமுதல்
author img

By

Published : Feb 10, 2023, 3:44 PM IST

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தின் வியாஸ் மொஹல்லாவில் 10 குவிண்டால் வெடிபொருட்கள், 13 மூட்டைகளில் 65 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் இன்று (பிப். 10) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தௌசா போலீசார் தரப்பில், வியாஸ் மொஹல்லாவில் அதிகளவில் வெடிபொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், தீவிர சோதனையில் ஈடுபட்டோம்.

அப்போது, கான் பங்காரி சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்துகொண்டிருந்த பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் 10 குவிண்டால் வெடிபொருட்கள், 13 மூட்டைகளில் 65 எலக்ட்ரிக் டெட்டனேட்டர்கள் மற்றும் கனெக்டர்கள் இருப்பது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த பின்பு, வெடிபொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு வாகனத்தின் ஓட்டுநரும் உரிமையாளருமான ராஜேஷ் மீனா (57) என்பவரை கைது செய்தோம்.

முதல்கட்ட தகவலில், இவர் வியாஸ் மொஹல்லாவை சேர்ந்தவர் என்பதும், சுரங்கப் பணிக்காக வெடிப்பொருள்களை இடம் மாற்றம் செய்ய முற்பட்டதும் தெரியவந்தது. இந்த சுரங்கப் பணிகளுக்கான ஆவணங்களும் ராஜேஷிடம் இருக்கவில்லை. ஆகவே, அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்திவருகிறோம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீரில் டன் கணக்கில் கொட்டிக் கிடக்கும் லித்தியம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.