ETV Bharat / bharat

இந்தியாவில் வாக்குகள் எப்படி எண்ணப்படுகிறது - விரிவாக பார்க்கலாம்! - வாக்குகள் எப்படி எண்ணப்படுகிறது

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன், வாக்கு எண்ணும் ஊழியரும் கட்சிகளால் நியமிக்கப்பட்ட முகவர்களும் வாக்கு இயந்திரத்தை சரிபார்ப்பார்கள். அதன்மேல் வைக்கப்பட்டுள்ள சீலில் ஏதேனும் மாற்றமிருந்தால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கலாம்.

இந்தியாவில் வாக்குகள் எப்படி எண்ணப்படுகிறது

author img

By

Published : May 1, 2021, 2:20 PM IST

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரேசில், இந்தோனேஷியா ஆகிய மூன்று நாடுகளின் மக்கள் தொகையை கூட்டினாலும் இந்திய மக்கள் தொகையை எட்டாது. இப்படி ஒரு நாட்டில் தேர்தல் நடத்துவது என்பது சற்று கடினமான காரியம்தான். வாக்களிப்பதை நிர்வகிப்பது, வாக்குகளை எண்ணுவது ஆகிய செயல்களை ஒரு கட்சி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

2004ஆம் ஆண்டு முதல் மக்களவை தேர்தல், சட்டப்பேரவை தேர்தலுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் பயன்படுத்திவருகிறது. தேர்தலை எளிதாக நடத்தவும், முடிவுகளை விரைந்து அறிவிக்கவும் வாக்குச் சீட்டு முறையை விட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சிறந்தது என கூறப்படுகிறது. ஆனால், இந்த இயந்திரத்தின் மீதும் மக்களுக்கு சந்தேகம் எழத் தொடங்கியது. தேர்தல் ஆணையத்தை சேர்ந்த தொழில்நுட்பக் குழு மக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் ஆணையம்
தேர்தல் ஆணையம்

இப்படி பல்வேறு சிக்கல்களோடு நடைபெறும் தேர்தலில் வாக்குகள் எப்படி எண்ணப்படுகிறது என்பது பற்றி காண்போம்:

இந்திய தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவுக்கான தேதியை அறிவிக்கும்போதே வாக்கு எண்ணிக்கைகான தேதி, நேரத்தை அறிவித்துவிடுகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை ஒரு தொகுதிக்கான மொத்த எண்ணிக்கையும் ஒரே இடத்தில் நடைபெறும். அந்த இடத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவு செய்வார். ஆனால் மக்களவை தேர்தலில், ஒரு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை பல்வேறு இடங்களில் நடைபெறும்.

வாக்கு எண்ணிக்கை தேர்தல் நடத்தும் அலுவலரின் முன்னிலையில் நடைபெறும். வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்கு முன்பாகவே வாக்கெடுப்பு அலுவலர்கள், அரசியல் கட்சிகளால் நியமிக்கப்பட்ட முகவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வந்துவிடுவார்கள். அவர்கள் அமர வேண்டிய இடம் மற்றும் பிற விவரங்கள் விவரிக்கப்படும்.

இந்தியாவில் வாக்குகள் எப்படி எண்ணப்படுகிறது
இந்தியாவில் வாக்குகள் எப்படி எண்ணப்படுகிறது

பொதுவாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறையில் 14 மேசைகள் வரை அமைக்கப்பட்டிருக்கும். ஒரு தொகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப வாக்குப்பெட்டிகள் இருக்கும். ஒரு சுற்றுக்கு 14 பெட்டிகள் எண்ணப்படும். சட்டப்பேரவை தேர்தலுக்கும், மக்களவை தேர்தலுக்கும் ஒன்றாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பட்சத்தில், முதல் 7 மேசைகள் சட்டப்பேரவை தேர்தலுக்கு ஒதுக்கப்படும். 8 - 14ஆம் நம்பர் மேசைகள் மக்களவை தேர்தலுக்கு ஒதுக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன், வாக்கு எண்ணும் ஊழியரும் கட்சிகளால் நியமிக்கப்பட்ட முகவர்களும் வாக்கு இயந்திரத்தை சரிபார்ப்பார்கள். அதன்மேல் வைக்கப்பட்டுள்ள சீலில் ஏதேனும் மாற்றமிருந்தால் தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கலாம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

வாக்குப் பதிவு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு இயந்திரத்தில் ரிசல்ட் என்ற பட்டன் அழுத்தப்பட்டதும், ஒவ்வொரு வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கை திரையில் தெரியும். அதனை வாக்கு எண்ணிக்கை ஊழியரும், வேட்பாளர்களின் முகவர்களும் குறித்துக்கொள்வார்கள். இதேபோல் 14 வாக்கு இயந்திரங்களில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

இந்த 14 இயந்திரங்களில் இருந்து பெற்ற எண்ணிக்கை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்படும். அவர் அந்த 14 இயந்திரங்களிலுள்ள எண்ணிக்கைகளை கூட்டி, அந்தந்த சுற்றில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்கு எண்ணிக்கையை அதிகாரபூர்வமாக கையெழுத்திட்டு அறிவிப்பார். ஒரு தொகுதியிலுள்ள வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப சுற்றுகளின் எண்ணிக்கை வேறுபடும். இந்த சுற்று முடிவுகள் மூலமே முன்னிலை விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும்.

தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்படும் வேறு மாநில அதிகாரி ஒருவர் எண்ணிக்கை முடியும் வரை உடன் இருப்பார். அத்தனை சுற்றுகளும் முடிந்த பிறகு, யாரும் ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில் தேர்தல் அலுவலர் முடிவுகளை அறிவிப்பார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.