ஹைதராபாத்: தெலங்கானாவில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும், காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இன்று (ஜூலை 27) - பத்ராத்ரி, கம்மம், ஜனகாமம், சூர்யாபேட், வாரங்கல், ஹனுமகொண்டா, மகபூபாபாத், பூபாலபள்ளி, முலுகு, பெத்தபள்ளி, கரீம் நகர், மஞ்சிரியாலா, குமுரம் பீம், அடிலாபாத், ஜகித்யாலா, சித்திபேட், மேடக், காமரெட்டி, சங்கரெட்டி, நல்கொண்டா ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து நாளை (ஜூலை 28) - யாதாத்ரி புவனகிரி, மகபூபாபாத், வாரங்கல், ஹனுமகொண்டா, கரீம்நகர், சித்திப்பேட்டை, மேடக், மேட்சல், அடிலாபாத், குமுரம் பீம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், நாளை மறுநாள் (ஜூலை 29) பெத்தபள்ளி, பூபாலபள்ளி, முலுகு, நிஜாமாபாத், நிர்மல், ஜகித்யாலா, அடிலாபாத் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், ஹைதராபாத்தில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: எதிர்கட்சிகளின் அமளியால் மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைப்பு!
மழைக்காலங்களில் துணியை காய வைப்பது எப்படி? மழைக் காலங்களில் நாம் அனைவருமே சந்தித்து வரும் பிரச்னைதான் இது. ஈரமான ஆடைகளை காய வைப்பது எப்படி என்பதற்கு சில வழிமுறைகள் கூறப்படுகிறது.
இதன்படி, உடையைத் துவைத்த பின் நாம் கயிற்றில் காயப் போடுவோம். அவ்வாறு செய்வதன் அடிப்படையில், உடையானது ஒரு பக்கம் காய்ந்தாலும், மறு பக்கம் சரியாக காய்ந்து இருக்காது. இதற்கு பதிலாக நாம் ஹேங்கரில் இணைத்து கயிற்றில் தொங்க விடுவதால் இந்த பிரச்னையை தவிர்க்கலாம். விசிறி அல்லது ஹீட்டர் உள்ள அறையில் வைத்தாலும், அவை விரைவாக காய்ந்து விடும். இதன் மூலம் ஈரத்தால் ஏற்படும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
சலவை இயந்திரத்தின் டிரையர் மூலம் நாம் உடையின் ஈரப்பதத்தை போக்கி விடலாம். அதன் பின் எடுத்து மேலே குறிப்பிட்டது போன்று செய்தால் எளிதில் காய்ந்து விடும். ஹேர் டிரையர் இருந்தால் அதையும் வைத்து முயற்சி செய்து பாருங்கள். உள்ளங்கை தூரம் வைத்துக் கொண்டு ஆடையை மேல் காண்பிப்பதன் மூலம் ஆடை சுலபமாக காய்ந்து விடும்.
இதையும் படிங்க: 30 ஆண்டுகளுக்கு பிறகு பாரம்பரிய பாதையில் நடைபெற்ற மொஹரம் ஊர்வலம்!