ETV Bharat / bharat

சூரியன் மேஷ ராசியில் சஞ்சரித்தல்.. உங்க ராசிக்கான பலன், பரிகாரங்கள்! - சூரியன் மேஷ ராசியில் சஞ்சரித்தல்

சூரியன் மேஷ ராசியில் சஞ்சரித்தலால் 12 ராசிதாரர்களுக்கான பலன்கள் மற்றும் பரிகாரங்களை பார்க்கலாம்..

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 15, 2023, 6:54 AM IST

மேஷம்: சூரியன் உங்கள் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதால் நீங்கள் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பீர்கள். இருப்பினும், இந்த நேரத்தில் உங்கள் ஈகோவும் அதிகரிக்கக் கூடும். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. வலது கண்ணில் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். தோல் எரிச்சல் ஏற்படலாம்.

பரிகாரம் - தினமும் சூரிய பகவானுக்கு தண்ணீரை காணிக்கையாக செலுத்தி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

ரிஷபம்: சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் போது உங்கள் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படலாம். வெளியூர் தொடர்பான வேலைகளால் நீங்கள் ஆதாயமடையலாம். உங்கள் முன்னேற்றத்திற்கான வழிகளை வீட்டை விட்டு வெளியே சென்று தேடலாம். இந்த நேரத்தில், நீங்கள் எதிரி தரப்பிலிருந்தும் பயனடையலாம். எந்தவிதமான நோயிருந்தாலும் நிவாரணம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் கிடைக்கப்பெறுவீர்கள்.

பரிகாரம் - தினமும் உங்கள் தந்தையின் ஆசியைப் பெறுங்கள்.

மிதுனம்: சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் இந்த ஒரு மாத காலமும் உங்களுக்கு நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் நட்பு வட்டம் அதிகரித்து நீங்கள் சமூகத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசாங்க வேலை செய்பவர்களுடனும் நட்பு கொள்வீர்கள்.

பரிகாரம் - தினமும் சிவபெருமானின் அருளைப் பெறுங்கள்.

கடகம்: மேஷத்தில் சூரியன் இருப்பதால், கடக ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதை அமைக்கப்படலாம். தொழில்ரீதியாக பயனடைவீர்கள். நீங்கள் பொதுத் துறை தொடர்பான வேலைகளில் பணிபுரிந்தால் அது உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

பரிகாரம் - காயத்ரி மந்திரத்தினை தினமும் ஒரு ஜபமாலை (108 முறை) ஜபியுங்கள்.

சிம்மம்: சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிப்பதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு இயற்கையாகவே நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்கள் நம்பிக்கை அதிகரித்து உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும், இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும். அதிர்ஷ்டம் சாதகமாக இருக்கும் என்று நினைத்து முயற்சி செய்ய தவறக்கூடாது.

பரிகாரம் – தினமும் ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை ஓதுங்கள்.

கன்னி: சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் போது கன்னி ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். கவனமாக வாகனங்களை ஓட்டவும், மின்சாதனங்களை கவனமாக பயன்படுத்த வேண்டும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முதலீடுகள் ஏதும் செய்யாமல் இருப்பது நல்லது.

பரிகாரம் - தினமும் காயத்ரி மந்திரத்தைப் பாராயணம் செய்யுங்கள்.

துலாம்: மேஷத்திற்கு சூரியன் பெயர்ச்சியாவதால், துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடனோ அல்லது தொழில் பார்ட்னர்களுடனோ கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த நேரத்தில் நீங்கள் அகங்காரமாக இருக்கலாம் மற்றும் மற்றவர்களின் கருத்துகளை காதில் வாங்காமல் இருக்கலாம். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், மற்றவர்கள் சொல்வதையும் கருத்தில்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

பரிகாரம் - தினமும் சிவபெருமானுக்கு ஜலாபிஷேகம் செய்யுங்கள்.

விருச்சிகம்: சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் இந்த ஒரு மாத காலமும் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் எதிரிகள் முன்பே வெற்றி பெறுவீர்கள். முன்பு இருந்துவந்த பழைய நோய்களும் சரியாகக்கூடும். நீங்கள் யாரிடமாவது கடன் வாங்க திட்டமிட்டால், இப்போதைக்கு சிறிதுகாலம் காத்திருப்பது நல்லது.

பரிகாரம் - தினமும் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

தனுசு: சூரியன் மேஷ ராசிக்குள் நுழைவதால் தனுசு ராசியில் பிறந்த மாணவர்கள் நல்ல செய்தியைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பார்கள். தனுசு ராசிக்காரர்களின் சமூக அந்தஸ்தும் உயரக்கூடும். ஆனால் இந்த நேரத்தில் காதலிப்பவர்களுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கலாம்.

மகரம்: சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் இந்த ஒரு மாத காலமும் உங்களுக்கு சற்று தொந்தரவாக இருக்கலாம். உங்கள் தாயின் உடல்நிலை முன்பை விட தற்போது நன்றாக இருந்தாலும், நீங்கள் அவர்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்படலாம். இந்த நேரத்தில் புதிய வாகனத்தை ஓட்ட வேண்டாம். நிலம் தொடர்பான வேலைகளில் கவனமாக இருக்க வேண்டும்.

பரிகாரம் – தினமும் சூரிய அஷ்டகத்தைப் பாராயணம் செய்யுங்கள்.

கும்பம்: சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் போது உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் இளைய உடன்பிறப்புகளின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆனால், வேலையைப் பொறுத்தவரை இரு பாறைகளுக்கு இடையே மாட்டிக்கொண்டதைப் போல கடினமாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில் அதிர்ஷ்டத்தை நம்பி முயற்சிக்காமல் இருப்பது நல்லதல்ல.

பரிகாரம் - தேவைப்படுபவர்களுக்கு கோதுமை தானம் செய்யுங்கள்.

மீனம்: சூரியன் மேஷ ராசிக்குள் நுழையும் போது, மீன ராசிக்காரர்களின் பேச்சு கடுமையாக இருக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். அதே நேரத்தில், எந்தவிதமான புதிய முதலீடுகளும் தீங்கு விளைவிக்கும். காரை எச்சரிக்கையுடன் ஓட்டுவது நல்லது.

பரிகாரம் - சூரிய பகவானுக்கு தினமும் குங்குமம் கலந்த தண்ணீரை காணிக்கையாக செலுத்தி சூரிய நமஸ்காரம் செய்யுங்கள்.

இதையும் படிங்க: Today Rasi Palan: கடக ராசிக்கு சவால்.. உங்க ராசிக்கு இன்றைய பலன் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.