ETV Bharat / bharat

வரலாற்றில் ஒருமுறை மட்டுமே நிகழ்ந்த அசாதாரண சம்பவம்... தன்னை தானே கைது செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்ட ஒரு வரலாற்று நாயகன்... - பெங்கால் பிரதேசம்

கொல்கத்தாவில் ஸ்டூவர்ட் ஹாக் என்ற ஆங்கிலேயே காவல் ஆணையர் தன்னை தானே கைது செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதுகுறித்த சிறப்புத்தொகுப்பை காணலாம்.

வரலாற்றில் தன்னை தானே கைதுசெய்த ஒரே நபர்

author img

By

Published : Aug 21, 2022, 5:19 PM IST

கொல்கத்தா: 1871ஆம் ஆண்டில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் காவல் ஆணையராக இருக்கும், ஸ்டூவர்ட் ஹாக் தனக்கு அனுப்பப்பட்ட வாரண்ட்டை அதிர்ச்சியோடும் வியப்புடனும் பார்த்துகொண்டிருகிறார். அதில் தன்னையே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. ஸ்டூவர்ட் ஹாக்கும் தன்னை கைது செய்துகொண்டார். இப்படிப்பட்ட வரலாற்றில் ஒரு முறை மட்டுமே நிகழந்த ஒரு சிறப்புத்தொகுப்பை காணுங்கள்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற எடான் கல்லூரியில் பட்டப் படிப்பை முடித்த ஸ்டூவர்ட் ஹாக், 1853ஆம் ஆண்டு இந்தியா வந்து, பெங்கால் சிவில் சர்வீஸில் இணைந்தார். அதன்பின் பர்ட்வான் மாவட்டத்தில் மாஜிஸ்ட்ரேட் பதவியை வகித்துவந்தார். அவரது துடிப்பான செயல்களும், நேர்மை மற்றும் வீரமான குணங்கங்களும் அவருக்கு மக்களிடையே நற்பெயரை பெற்றுத்தந்தது. குறிப்பாக 1865-66 காலகட்டத்தில் மேற்கு வங்கத்தில் மிகப்பெரும் பஞ்சம் நிலவியபோது, ஸ்டூவர்ட் தனது அலுவலகத்தை மக்களுக்கான முகாமாக மாற்றி உதவிபுரிந்தது, ஒட்டுமொத்த மக்களின் அன்பையும் பெற்றது.

முக்கிய 2 பொறுப்புகள்: அதன்பின் 1866ஆம் ஆண்டில் பர்ட்வான் நகரில் இருந்து கொல்கத்தா நகருக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இரண்டு முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. ஒன்று, கொல்கத்தாவின் காவல் ஆணையர், மற்றொன்று கொல்கத்தாவின் மாநகராட்சி தலைவர். இதனால் அவர் நாளின் முதல் பாதியை, நகரின் லால்பஜாரில் உள்ள காவல் தலைமையகத்திலும், பிற்பகுதியை ஜன்பஜார் தெருவில் இருந்த மாநகராட்சியின் தலைமை அலுவலகத்திலும் கழித்துவந்தார். இவரது காலகட்டத்தில் மேற்கு வங்கத்தில் பல்வேறு கட்டடங்கள், பாலங்கள், ரயில் பாதைகள் எழுப்பப்பட்டன.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், நகரின் முக்கிய பகுதியில் அவரது கண்காணிப்பில் கட்டப்பட்ட மிகப்பெரிய மார்க்கெட் வளாகம் 1874ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி திறக்கப்பட்டது. முதலில், ஹாக் சாகேப் மார்க்கெட் என்றழைக்கப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பிறகு, 1903ஆம் ஆண்டு முதல் ஸ்டூவர்ட் ஹாக் மார்க்கெட் என்று பெயர் மாற்றப்பட்டது. இன்றை காலத்தில் 'நியூ மார்க்கெட்' என்றே அறியப்படுகிறது.

முதல் துப்பறிவாளன்: மாநகராட்சி தலைவராக மார்க்கெட் ஒருபுறமிருக்க, பெங்கால் காவல்துறையில் தனி உளவுப் பிரிவை உருவாக்கினர். குற்றங்கள் அதிகரிப்பதை முன்கூட்டியே தடுக்க இதை உருவாக்கினார். அந்த நேரத்தில், ஆம்ஹெர்ஸ்ட் தெரு காவல் நிலையம் அருகே ரோஸ் பிரவுன் என்ற ஆங்கிலோ-இந்திய பெண்மணியை அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொடூர கொலை வழக்கை உளவுப் பிரிவின் முதல் துப்பறிவாளர் ரிசர்ட்டு ரீட் என்னும் அதிகாரி விசாரித்து குற்றவாளியையும் கண்டுபிடித்தார். இதற்கு ஸ்டூவர்ட் ஹாக்கும் உறுதுணையாக இருந்தார். இந்த வழக்கு மிக சுவாரஸ்சியமானது என்று கூறலாம். இந்த வழக்கு ஸ்டூவர்ட் சுயசரிதை புத்தகமான "Everyman his Own Detective" என்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து இங்கிலாந்து விடுமுறைக்காக இங்கிலாந்து சென்றிருந்தார். அதே வேளையில் இவரது உடைமைகள் அடங்கிய பெட்டி ஒன்று காணாமல் போனது. இதனையறிந்த கொல்கத்தா போலீசார் மூலைமுடுக்கெல்லாம் இரவு பகலாக தேடினர்.

ஒரு கட்டத்தில் அந்த பெட்டி அலகாபாத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு உள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடந்தது. அப்போது மாஜிஸ்திரேட், கொல்கத்தா மாநகராட்சி தலைவர் ஸ்டூவர்ட் பெயருக்கு ஒரு சம்மன் அனுப்பி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிடுகிறார்.

இந்த சம்மன் அனுப்பிய வேளையில் இங்கிலாந்தில் இருந்து ஸ்டூவர்ட் திரும்பிக் கொண்டிருக்கிறார். இதையடுத்து அவருக்கு வேலை பளுவும் கூடிவிட்டதால், நீதிமன்ற சம்மனுக்கு எந்த பதிலும் அளிக்க வில்லை. இதனால் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு மற்றொரு சம்மன் அனுப்பப்படுகிறது.

அதில், நீதிமன்றத்தில் ஆஜராகாத மாநகராட்சி தலைவர் ஸ்டூவர்ட் ஹாக்கை உடனடியாக கைது செய்து விசாரணைக்கு கொண்டுவருமாறு காவல் ஆணையர் ஸ்டூவர்ட் ஹாக்கு உத்தரவிடப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த சம்மனை பார்த்து அதிர்ச்சியோடும் ஸ்டூவர்ட் அதிர்ச்சியும் வியப்பும் அடைந்தார். அதோடு 1871ஆம் ஆண்டில் நீதிமன்றத்திலும் ஆஜரானார். இந்த செய்தியை அப்போதைய பத்திரிகைகள் காரசாரமாக வெளியிட்டுள்ளன.

இந்த விசித்திரமான சம்பவத்தில் ஸ்டூவர்ட் ஹாக்கின் பயணச்செலவில் அரசு ஒரு பைசாவைக் கூட ஏற்க கூடாது என்று நீதிமன்ற உத்தரவிட்டது. அதனால், கொல்கத்தா - அலகாபாத்; அலகாபாத் - கொல்கத்தா பயண செலவை தானே ஏற்றுக்கொண்டார் ஸ்டூவர்ட்.

இதையும் படிங்க: Exclusive... அடுத்தது நான் தான்... சல்மான் ருஷ்டி சம்பவத்திற்குப் பின் தஸ்லிமா நஸ்ரினின் பேட்டி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.