ETV Bharat / bharat

நிலவில் விழப்போகும் எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் - ஆராயக் காத்திருக்கும் நாசா - நிலவில் விழப்போகும் எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்

கடந்த ஆண்டு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக விண்வெளி மையத்தில் விடப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ராக்கெட்டின் பாகங்கள் நிலவில் வரும் மார்ச் 4ஆம் தேதி விழுவதால் ஏற்படும் பள்ளத்தை ஆய்வு செய்ய இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது.

நிலவில் விழப்போகும் எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் -  காத்திருக்கும் நாசா

author img

By

Published : Jan 30, 2022, 9:35 PM IST

ஸ்பேஸ் எக்ஸ் தயாரித்த ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கன் 9 ரக ராக்கெட்டின் கனமான துண்டு வரும் மார்ச் 4ஆம் தேதி நிலவின் பூமிக்குத் தெரியாத பாகத்தில் சுமார் 8,000 கி.மீ வேகத்தில் மோத உள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வாளர் பில் கிரே இதனை துல்லியமாக கணித்துக் கூறியுள்ளார்.

சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் மற்றும் விண்வெளியில் மிதந்து கொண்டிருக்கும் குப்பைகளின் நகர்தலைக் கொண்டு மென்பொருள் ஒன்றை உருவாக்கியுள்ளார். இந்த மென்பொருளின் கணக்கீட்டின் படி, ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் துண்டுகள் மார்ச் 4 அன்று முற்பகல் 11.25(இந்திய நேரப்படி மாலை 4.55) நேரத்தில் நிலவை மோதும் எனக் கணக்கீடப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து விஞ்ஞானிகளின் கூறுகையில், இதனால் பாதிப்பு சிறியதாக இருக்கும். 2015ஆம் ஆண்டு டீப் ஸ்பேஸ் க்ளைமேட் அப்சர்வேட்டரி (DSCOVR) எனப்படும் நாசா செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது.

அதன் செயற்கைக்கோள் பிரிந்து சென்றது. மீதமுள்ள பாகமானது எரி பொருள் பற்றாக்குறை காரணமாக விண்வெளியிலேயே விடப்பட்டதாக கூறப்படுகிறது.

நிலவில் விழப்போகும் எலன் மாஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் -  நாள் குறித்த நாசா

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் பாகங்கள் நிலவில் மோதும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது விழுவதால் ஏற்படும் பள்ளத்தை ஆய்வுசெய்ய உள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் - நாசா (NASA ) கடந்த வியாழக்கிழமை கூறியுள்ளது.

4-டன் எடை பாகம் நிலவு சுற்றுப்பாதையில் எப்படி சென்றது?

விண்வெளிக்கு அனுப்பப்படும் ராக்கெட்டுகள் பொதுவாக எரிபொருள் தீர்ந்தவுடன் பூமியை நோக்கி வருமாறு அமைக்கப்பட்டிருக்கும். இந்த ஸ்பேஸ் எக்ஸ் 9 இன்ஜின் ரக ராக்கெட், மற்ற செயற்கைக்கோளை அனுப்பும் ராக்கெட்டை விட அதிக தூரத்திற்குச் சென்றுள்ளது.

4-டன் எடை பாகம் நிலவு சுற்றுப் பாதையில் எப்படி சென்றது?

முதல் கட்டத்தில் எரிபொருள் தீர்ந்தவுடன் பாகங்கள் பூமியை நோக்கி விழுந்தன. இரண்டாம் கட்டத்தில் நிலவின் சுற்றுப்பாதைக்கு அருகில் சென்றுள்ளது.

செயற்கோளை விட்டு பிரிந்தவுடன் விண்வெளியின் பக்கத்தில் பூமியில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவிற்குத் தள்ளப்பட்டுள்ளது.

கடந்த 7 ஆண்டுகளாக இந்த ராக்கெட்டின் பாகங்கள் பூமி, சூரியன் மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையினால் அங்கும் இங்கும் மிதந்து கொண்டிருந்தன. கணிக்க முடியாத ஒரு சுற்றுப் பாதையில் சுற்றி வந்த பாகங்கள் தற்போது நிலவின் மேற்பரப்பில் இருந்து மாறி, நிலவில் விழப்போகிறது. இதனால் நிலவின் பரப்பில் 520 கி.மீ., அகலத்தில் பள்ளத்தை ஏற்படுத்தலாம்.

வல்லுநர்களின் கருத்து

ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் பாகங்கள் விழுவதை குறித்து அமெரிக்க விஞ்ஞானி கிரே கருத்து தெரிவித்திருந்த நிலையில், ஹார்வேர்டு பல்கலை கழகத்தின் வானியல் இயற்பியலாளர் மேக்டவுல் கூறியதாவது ” சந்திரனுக்கு மேலே விண்வெளியில் பல மைல் தூரத்தில் நிலவின் தூசி ஸ்பேரே போன்று இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:2021ஆம் ஆண்டின் சிறந்த நபர் எலான் மஸ்க்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.