ETV Bharat / bharat

"கமாண்டோக்கள் நீங்கினால் சந்திரபாபு சோலி முடிந்தது" ஆந்திரா சபாநாயகர் சர்ச்சை பேச்சு! - சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, z பிளஸ் பாதுகாப்புக்கு எப்படி தகுதியானார் என, ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Andra speaker
ஆந்திரா சபாநாயகர்
author img

By

Published : May 30, 2023, 8:58 PM IST

ஸ்ரீகாகுளம் (ஆந்திரா): ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி ஸ்ரீகாகுளம் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் உருவச்சிலைக்கு கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து ஸ்ரீகாகுளம் அருகே உள்ள அமுதலவலசா பகுதியில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் ஆந்திர சட்டப்பேரவை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் சீதாராம் கூறுகையில், "சந்திரபாபு நாயுடுவை சுற்றி கமாண்டோக்கள் உள்ளனர். அவர்களை நீக்கிவிட்டால் அவரது வேலை முடிந்துவிடும். யாரை மீட்பதற்காக சந்திரபாபு தன்னுடன் பாதுகாவலர்களை வைத்துள்ளார்? அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

அவர் எப்படி z பிளஸ் பாதுபாப்புக்கு தகுதியானார்? நாட்டில் எத்தனையோ பேர் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியுமா? இந்த சரியான முறை அல்ல. சந்திரபாபுவுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது தேவையில்லாதது.

ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில், ஆந்திராவில் திறன் வாய்ந்த அரசு செயல்பட்டு வருகிறது. மக்களுக்கான நலத்திட்டங்கள் வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஜெகன் மோகன் திறமையில்லாத முதலமைச்சர் என சந்திரபாபு விமர்சித்தார். ஆனால் தற்போது ஆந்திர மாநிலம் சிறப்பான வளர்ச்சியை பெற்றிருக்கும் நிலையில், சந்திரபாபு பேச முடியாமல் நிற்கிறார்.

சந்திரபாபு ஆட்சி காலத்தில் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதுடன், ஊழல், முறைகேடுகள் அரங்கேறின. மாநிலத்தில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. இனி, எத்தனை பொய் சொன்னாலும் அதை கேட்கும் மன நிலையில் மக்கள் இல்லை. ஜெகன் மோகன் ரெட்டி இருக்கும் வரை, யாரும் முதலமைச்சர் ஆக முடியாது. அந்த மனநிலையை அவர்கள் விட்டுவிட வேண்டும். சந்திரபாபு நாயுடு சுய நினைவுக்கு வர வேண்டும். யாரையும் விமர்சிக்காமல் அவர் அமைதியாக இருப்பது நல்லது" என்றார்.

ஆந்திர மாநிலத்தில் 2019ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151 இடங்களை கைப்பற்றி, ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி, ஆட்சியை கைப்பற்றியது. சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி 23 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜனசேனா கட்சி ஒரு இடத்தை பிடித்தது. தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அசோக் கெலாட் - சச்சின் பைலட் இடையே சமரசம்; இணைந்த துருவங்கள்.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.