சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் அருகே உள்ள தசுஹாவில் இன்று (ஜூலை 29) காலை தனியார் பள்ளிப்பேருந்து மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து வாகனவோட்டிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதனடிப்படையில் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து மாணவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில், விபத்துக்குள்ளான பேருந்தில் 15 மாணவர்களுடன் ஓட்டுநர் இருந்தனர். இதில் 2 மாணவர்கள் உயிரிழந்தனர். மீதமுள்ள 13 மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. லாரி ஓட்டுநரை கைது செய்துள்ளோம். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இரண்டு டபுள் டக்கர் பேருந்துகள் மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு