மேஷம்
உங்களது தோற்றம், செயல்திறன் காரணமாக இன்று நீங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்ப்பீர்கள். இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு புத்துணர்வு பெற வேண்டும். இதன்மூலம் நீங்கள் பெரிய அளவில் வெற்றிபெற முடியும்.
ரிஷபம்
இன்றைய நாளைப் பொறுத்தவரை, உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கும், கோரிக்கைவைப்பதற்கும் சாதகமான நாள் அல்ல; சச்சரவுகள் விவாதங்கள் ஆகியவற்றைத் தவிர்க்கவும். சச்சரவுகளைத் தவிர்க்கவில்லை என்றால், அது உங்களைப் பெரிதும் பாதிக்கும் வகையில் இருக்கும். அதனால் உங்களது புகழும் சுயமரியாதையும் பாதிக்கப்படலாம். கவனமாகச் செயல்படவும்.
மிதுனம்
இன்று அதிர்ஷ்ட தேவதை உங்களைப் பார்த்து புன்னகைக்கிறார். நீங்கள் பொதுவாக கூச்ச சுபாவம் உள்ளவர். ஆனால் இன்று வித்தியாசமாக, நீங்கள் வெளியில் சென்று உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவீர்கள். இந்தத் தற்காலிக மாற்றம் உங்களுக்கு நன்மையை ஏற்படுத்தும்.
கடகம்
விரும்பத்தகாத நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகளை நீங்கள் சந்திக்கக்கூடும். அதனால் நீங்கள் மனக்கவலை அடைவீர்கள். உங்களது செயல்திறன் மூலமாக அனைத்தையும் வெற்றிகொள்வீர்கள். படிப்பில் கவனம் செலுத்தவும். வெற்றி என்பது 99 விழுக்காடு முயற்சி, ஒரு விழுக்காடு விதி என்பதை நினைவில் கொள்ளவும்.
சிம்மம்
புத்துணர்வு, புத்துயிர் - இந்த இரண்டு சொற்கள் இன்றையத் தத்துவமாக இருக்கும். உங்களைப் புதுப்பிக்கச் செய்வது என்பது, புதிதாக எதையேனும் ஏற்படுத்துவது என்று அர்த்தமல்ல. நீங்கள் வந்த வழியே திரும்பிப் பார்த்து ஆராய்ந்து சிந்திப்பதாகும்.
கன்னி
வர்த்தகம், பொழுதுபோக்கு ஆகிய இரண்டிற்கும் நீங்கள் சமமான முக்கியத்துவம் கொடுப்பீர்கள். விருந்து ஒன்றில் கலந்துகொண்டு நீங்கள் மகிழக்கூடும். நீங்கள் எவ்வளவு அதிக நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவிற்குச் செலவு இருக்கும். எனினும் நீங்கள், செலவு செய்யும்போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
துலாம்
தொடர்பு, வெளிப்பாடு - பணியிடத்தில் இந்த இரண்டு விஷயங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். இந்த இரண்டையும் சிறந்த வகையில் கையாளும் திறன் உங்களுக்கு உண்டு. வர்த்தக ஆலோசனை என்றாலும் கூட்டங்கள் என்றாலும் நீங்கள் எதிலும் சிறந்து விளங்குவீர்கள். மக்களைத் தொடர்புகொள்வது உங்களுக்கு ஒரு சிக்கலாக இருக்காது. எனினும் மாலைப்பொழுது உங்கள் மனத்திற்குப் பிடித்தவருடன் நேரத்தைச் செலவழித்து மகிழ்ச்சியாக இருக்க விரும்புவீர்கள்.
விருச்சிகம்
உறவுகள், வாழ்க்கையின் வேர்களாகும். உங்களது நெருங்கிய உறவினர்கள், உங்களைச் சுற்றியுள்ளவர்களை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது மிகவும் முக்கியமாகும். அவர்களது முக்கியத்துவத்தை உணரச் செய்யவும். கருத்து வேறுபாடுகள் இருந்தால் அதைத் தீர்க்கவும். நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது.
தனுசு
பிரச்சினைகள் அல்லாத குழந்தைப் பருவத்திற்கு செல்ல நீங்கள் விரும்புவீர்கள். திட்டமிடப்படாத சுற்றுலா பயணம் போன்றவற்றை மேற்கொள்ள நீங்கள் விரும்பலாம். பழைய நண்பர்களைச் சந்திப்பதன் மூலம், மலரும் நினைவுகள் மூலம், மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.
மகரம்
இன்று, பணியிடத்தில் உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். சகப் பணியாளர்கள் உங்கள் வெற்றியைப் பார்த்துப் பொறாமைப்படாமல், அவர்கள் உங்களுக்கு ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால் புதிய பணிகளில் வரும் சாதனைகளில் திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுக்கவும். தற்போது நிலைமை சாதகமாக இல்லை.
கும்பம்
வலியைக் கொடுக்கும் உங்கள் கடவுள், சுகத்தையும் வழங்குவார். இன்றைய நாளின் தொடக்கத்தில், செய்ய வேண்டிய பணி அதிகம் இருந்தாலும், இவை அனைத்தையும் ஒவ்வொன்றாகச் செய்து முடித்துவிடுவீர்கள். அதனால் நீங்கள் சோர்வாக உணரக்கூடும். குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு அமைதியாக ஓய்வு எடுக்கவும்.
மீனம்
நீங்கள் தினசரி பணியை ஒழுங்குப்படுத்த, அதிக முயற்சிகளை எடுத்துக் கொள்வீர்கள். ஆனால் கிரக நிலைகள் சாதகமாக இல்லாத காரணத்தினால், நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி அடையாமல் போகலாம். எனவே நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்து, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால் நிலைமை தானாகவே சரியாகும்.
இதையும் படிங்க: எனக்கு என்டே கிடையாது - வைகைப்புயலின் ரீஎன்ட்ரி பேச்சு!